Cinema History
அப்பாவுக்காக அதை செய்யனும்னு நினைச்சேன்!.. – பார்த்திபனோட முதல் படத்துல இப்படி ஒரு சென்டிமெண்டா?
தமிழ் சினிமாவில் தற்சமயம் இயக்குனராக இருக்கும் பலரும் ஆரம்ப கட்டத்தில் சினிமாவில் உதவி இயக்குனர் ஆவதற்காக பல இடங்களில் வாய்ப்புகள் தேடி பிறகு வாய்ப்புகள் பெற்று உதவி இயக்குனராகிதான் தற்சமயம் பெரும் இயக்குனர்களாக இருக்கின்றனர். லோகேஷ், கார்த்திக் சுப்புராஜ் போன்ற சிலர் இதில் விதிவிலக்கு.
ஒரு காலத்தில் அப்படி உதவி இயக்குனர் ஆவதற்காக வாய்ப்பு தேடி அலைந்து இயக்குனர் பாக்கியராஜ் மூலமாக சினிமாவிற்குள் வந்தவர்தான் நடிகரும் இயக்குனருமான பார்த்திபன்.
தமிழில் வித்தியாசமான திரைப்படங்கள் எடுக்கும் இயக்குனர்களில் பார்த்திபன் முக்கியமானவர். பார்த்திபன் இயக்கிய சில படங்கள் வசூல் ரீதியாக பெரும் வெற்றியை கொடுக்காவிட்டாலும் கூட மக்கள் மத்தியில் அதிக விவாதங்களை ஏற்படுத்தக்கூடிய படங்களாக அமைந்துள்ளன. அதேபோல உலக அளவில் சாதனைகளை படைக்கும் சில திரைப்படங்களையும் பார்த்திபன் எடுத்துள்ளார்.
அவர் இயக்கிய இரவின் நிழல், ஒத்த செருப்பு போன்ற திரைப்படங்களை அதற்கு உதாரணங்களாக கூறலாம். ஆரம்ப கட்டத்தில் சினிமாவிற்கு வந்தபோது நடிகராக வேண்டும் என்கிற ஆசையில் தான் பார்த்திபன் சினிமாவிற்கு வந்தார். அப்போது அவருக்கு ஒரு பெரும் ஆசை இருந்தது பார்த்திபனின் தந்தை ஒரு போஸ்ட்மேனாக பணிபுரிந்து வந்தார். எனவே திரைப்படத்தில் நடிக்கும்பொழுது முதன் முதலில் போஸ்ட்மேனாகதான் நடிக்க வேண்டும் என்கிற ஒரு குறிக்கோளோடு பார்த்திபன் சினிமாவிற்கு வந்தார்.
பார்த்திபனுக்கு இருந்த செண்டிமெண்ட்:
சினிமாவிற்கு வந்தவர் பாக்யராஜிடம் ஒரு இயக்குனராக சேர்ந்தார். விதி என்கிற திரைப்படத்தில் பாக்யராஜ் ஏற்கனவே போஸ்ட்மேனாக நடித்திருந்தார். அந்த ஆடையை சென்டிமென்டாக வாங்கி வைத்துக் கொண்டார் பார்த்திபன்.
எனவே அடுத்து நடிக்கும் படத்தில் முதலில் போஸ்ட்மேனாகதான் நடிக்க வேண்டும் என உறுதியாக இருந்தார் பார்த்திபன். அப்போதுதான் தாவணி கனவுகள் திரைப்படத்தில் ஒரு போஸ்ட்மேன் கதாபாத்திரம் முக்கியமானதாக இருந்தது. அதை பார்த்த பார்த்திபன் பாக்யராஜிடம் பேசி அந்த கதாபாத்திரத்தில் முதன் முதலாக நடித்தார்.
முதன் முதலாக பார்த்திபன் அந்த படத்தில் நடித்திருந்தது பலருக்கும் தெரியும் என்றாலும், அதற்கு பின்னால் இவ்வளவு பெரிய செண்டிமெண்ட் இருப்பது அவர் பேட்டிகள் கூறிய போதுதான் பலருக்கும் தெரிந்துள்ளது.