மாளவிகா மோகனன் என்றால் ரசிகர்களுக்கு நினைவுக்கு வருவது வாளிப்பான உடம்பும், வசீகரிக்கும் கவர்ச்சியும்தான். தொடர்ந்து கிளுகிளுப்பான புகைப்படங்களை வெளியிட்டுதான் நெட்டிசன்களிடம் பிரபலமானார்.

அதன் காரணமாகவே இவருக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைத்தது. சில மலையாள திரைப்படங்களில் நடித்துவிட்டு தமிழுக்கு வந்தார். தமிழில் முதல் படமே ரஜினியுடன் நடித்தார்.

பேட்ட படத்தில் அறிமுகமான இவர் அடுத்து மாஸ்டர், மாறன் ஆகிய படங்களில் நடித்தார். ஆனால், இந்த மூன்று படத்திலுமே இவருக்கு அழுத்தமான வேடம் கிடைக்கவில்லை.

தற்போது பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் தங்கலான் படத்தில் ஒரு அழுத்தமான வேடத்தில் நடித்துள்ளார். இந்த படம் வெளியானால் தனக்கு வாய்ப்புகள் வரும் என மாளவிகா காத்திருக்கிறார்.

மேலும், வாளிப்பான உடம்பை காட்டி தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தன்பக்கம் இழுத்து வருகிறார்.

அந்த வகையில் வெள்ளை நிற புடவையில் க்யூட்டாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

