படம் முழுக்க பொய்யா இருக்கு..! –  கேரளா ஸ்டோரி திரைப்படத்தால் கடுப்பான இயக்குனர் அமீர்…

Published on: May 8, 2023
---Advertisement---

சினிமாவில் சில நேரங்களில் சமூக கருத்து சொல்கிறேன் என சில இயக்குனர்கள் இயக்கும் திரைப்படங்கள், பொது மக்கள் மத்தியில் மிகவும் விமர்சனத்துக்குள்ளாகிவிடும். வருடத்திற்கு ஒரு படமாவது இப்படி வருவது உண்டு.

அந்த வகையில் இந்த வருடம் பாலிவுட்டில் எடுக்கப்பட்ட இந்தியா முழுவதும் வெளியான கேரளா ஸ்டோரிஸ் என்கிற திரைப்படம் பெரும் எதிர்ப்பை சந்தித்து வருகிறது. இந்த திரைப்படம் மத ரீதியாக வெறுப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளது என பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த படம் வெளியாவதற்கு முன்பே இதை தடை செய்ய சொல்லி வழக்கு நடந்தது. ஆனால் அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. அதன் பிறகு போலீஸ் பாதுக்காப்போடு பல பகுதிகளில் இந்த படம் வெளியானது. இதற்கு முன்பு இவ்வளவு முன்னெச்சரிக்கை நடவடிக்கையோடு ஒரு படம் வெளியாகி இருக்குமா? என தெரியவில்லை.

கடுப்பான அமீர்:

இந்த நிலையில் இந்த படம் குறித்து பேசிய இயக்குனர் அமீர், இந்த திரைப்படம் ஒரு விஷ விதை. இஸ்லாமிய வெறுப்பை மக்கள் மத்தியில் திணிப்பதற்காகவே இந்த படத்தை வெளியிட்டுள்ளனர். இந்த இயக்குனருக்கு பின்னால் ஒரு அமைப்பு இருந்துக்கொண்டு இந்த படத்தை வெளியிட்டுள்ளது.

Ameer
Ameer

இதுவே நான் குஜராத்தில் நடந்த மத கலவரத்தை பின்புலமாக வைத்து படம் எடுத்தால் அது சென்சார் போர்டையே தாண்டாது என பேசியிருந்தார் அமீர். மேலும் அவர் கூறும்போது, பிரதமரே இந்த படத்தை மேற்க்கோள் காட்டி பேசுகிறார். இந்தியாவில் எவ்வளவோ உளவு அமைப்புகள் உள்ளன. அதில் தீவிரவாதம் குறித்த தரவுகள் இருக்கும்.

அதை வைத்து எல்லாம் தீவிரவாதம் பற்றி பேசாமல் ஒரு ஆதாரமற்ற படத்தை வைத்து பேசுலாமா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

இதையும் படிங்க: நல்ல வேளை விஜய் அவங்க கிட்ட சிக்கல!.. பாரதிராஜா ,கௌதம் மேனன் குறித்து எஸ் ஏ சி பரபரப்பு பேட்டி..

Rajkumar

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.