
சென்னையை சேர்ந்தவர் மாரிமுத்து மீன்பாடி வண்டி ஓட்டி வாழ்க்கை நடத்தி வருகிறார் இவருடைய மனைவி அபிதாவிற்கும் மாரிமுத்துவின் நண்பர் புளியந்தோப்பு கன்னிகாபுரம் பகுதியைச் சேர்ந்த ஜான்சனுக்கும் அடிக்கடி பழக்கம் ஏற்பட்டு கள்ளத்தொடர்பாக மாறியது.
இதனால் வீட்டில் அடிக்கடி சண்டை நடந்ததைடுத்து நேற்று மதியம் ஜான்சன், செல்போனில் அபிதாவை தொடர்பு பேச முயன்றுள்ளார். ஆனால், அபிதா போனை எடுக்காததால் கோபமடைந்த ஜான்சன் நன்றாக மது அருந்திவிட்டு மாரிமுத்துவின் வீட்டிற்கு வந்து மறைத்து வைத்திருந்த கத்தியால் அபிதாவை சரமாரியாக தாக்கியுள்ளார்.
இதில் ரத்த வெள்ளத்தில் அபிதா மயங்கி கீழே அலறல் சத்தம் கேட்ட மாரிமுத்து, ஜான்சனை சரமாரியாக தாக்க இருவரையும் மருத்துவமனையில் சேர்த்தனர். மாரிமுத்துவை போலிசார் கைது செய்தனர்.





