மறைந்த நடிகர் மனோபாலாவை குறித்து அவ்வப்போது ஏராளமான தகவல்கள் வந்து கொண்டே இருக்கின்றன. இயக்குனர் என்பதையும் தாண்டி ஒரு நகைச்சுவை நடிகராக மக்கள் மத்தியில் ஆழமாக பதிந்தவர் மனோபாலா. எந்த கதாபாத்திரம் என்றாலும் அதை முழுமூச்சுடன் செய்யக் கூடியவர். தன்னுடைய சம்பளம் பற்றியோ கதையைப் பற்றியோ கவலைப்படாமல் தாமாகவே வாய்ப்புகளைத் தேடி அலையக்கூடிய ஒரு நடிகர்.
நல்ல மனசுக்காரர்
அனைத்து பிரபலங்கள் மத்தியிலும் ஒரு நல்ல மனிதராகவே வாழ்ந்து வந்தார் மனோபாலா. அனைவருக்கும் பிடித்த நடிகராகவும் இருந்து வந்தார். நடிகர் கமல்ஹாசனின் உதவியோடு பாரதிராஜாவிடம் உதவியாளராக சேர்ந்த மனோபாலா அதனைத் தொடர்ந்து பல படங்களை இயக்கி ஒரு இயக்குனர் என்ற அந்தஸ்தை பெற்றார். கிட்டத்தட்ட 30க்கும் மேற்பட்ட படங்களை இயக்கி அதன் மூலம் ஒரு தவிர்க்க முடியாத இயக்குனராகவும் 80 90களில் வலம் வந்தார்.

ஒரு சில படங்களை தயாரிக்கவும் செய்திருக்கிறார். அந்த வகையில் சதுரங்க வேட்டை படம் இவரின் வாழ்க்கையில் மிகப் பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அந்தப் படம் எப்பேர்பட்ட வெற்றியை பதிவு செய்தது என அனைவருக்கும் தெரிந்த விஷயம். சதுரங்க வேட்டை படத்தின் வெற்றியை தொடர்ந்து அந்த படத்தின் இரண்டாம் பாகத்தையும் தயாரித்தார் மனோபாலா. ஆனால் அந்தப் படத்தில் லீடு ரோலில் நடித்த அரவிந்தசாமியின் சம்பளம் குறித்த பிரச்சனை காரணமாக படம் முடிக்கப்பட்ட நிலையிலும் இன்னும் வெளிவராமல் அப்படியே கிடப்பில் போடப்பட்டிருக்கிறது.
மனோபாலாவின் நிறைவேறாத ஆசைகள்
மனோ பாலாவிற்கு என்று சில நிறைவேறாத ஆசைகள் இருந்தன என பிரபல பத்திரிக்கையாளரான பயில்வான் ரங்கநாதன் கூறினார். அதில் ஒன்றுதான் சதுரங்க வேட்டை படத்தின் இரண்டாம் பாகம். மற்றொன்று இதுவரை கமல் படத்தில் நடித்ததே இல்லையாம் மனோபாலா. அவர் நடித்த முதல் படமும் கடைசி படமும் இந்தியன் 2 படம் தான் என்று கூறி இருக்கிறார்.

மேலும் மனோபாலாவிற்கு தன்னுடைய இரங்கலை தெரிவிக்க வந்த விஜயின் வருகையை ஊடகங்களில் இருந்து ரசிகர்கள் வரை அனைவரும் ஒரு விமர்சனமாகவே பார்த்தார்கள். அதற்குப் பின்னணியில் சில காரணங்கள் இருந்ததாகவும் பயில்வான் ரங்கநாதன் கூறினார். மனோபாலாவை விஜய் எப்பொழுதும் அண்ணே அண்ணே என்று மிகவும் பாசத்தோடு தான் அழைப்பாராம். அந்த ஒரு நெருக்கம் தான் விஜய்யை வரவழைத்தது என்று கூறிய பயில்வான் ரங்கநாதன் மேலும் ஒரு தகவலை கூறினார்.
மனோபாலாவிற்கு இப்படியும் நடந்ததுதா?
விஜய் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் லியோ படத்திலும் மனோபாலா நடித்திருக்கிறாராம். அந்தப் படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் நடந்து கொண்டிருக்கும்போது சிம்லாவில் ஒரு சில காட்சிகள் படமாக்கி கொண்டு இருந்தார்களாம். அப்போது மனோ பாலா சிம்லாவில் லியோ படத்தில் படப்பிடிப்பு சம்பந்தமான சில தகவல்களை தன்னுடைய வலைதள பக்கத்தில் பகிர்ந்தாராம். அந்தப் படத்தின் இயக்குனரான லோக்கேஷை பொருத்தவரைக்கும் எந்த ஒரு தகவலும் ரகசியமாகவே பாதுகாக்கப்படும் என்ற எண்ணம் கொண்டவர். இதில் மனோபாலா இந்த மாதிரி செய்தது லோகேஷ் உட்பட பலருக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியதாம்.

அதன் பிறகு மனோபாலாவை அங்கிருந்து சென்னைக்கு அனுப்பி விட்டதாகவும் சிறிது நாட்கள் கழித்தே திரும்பவும் மனோபாலாவை லியோ படத்தில் சேர்த்துக் கொண்டதாகவும் பயில்வான் ரங்கநாதன் கூறினார்.
இதையும் படிங்க : நீங்க மக்களை ஏமாத்துறீங்க- சிவாஜியை நேருக்கு நேராகவே வம்பிழுத்த இயக்குனர்… என்னவா இருக்கும்!
