
கடந்த ஆண்டு வெளியான மகாநடி திரைப்படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் சிறப்பான வரவேற்பைப் பெற்றது. அந்த படத்தின் நாயகிக்கு தேசிய விருது கிடைக்கவும் காரணமாக இருந்தது. இந்நிலையில் இந்த படத்தின் இயக்குனர் அஸ்வின் நாக் அடுத்ததாக பிரபாஸ் நடிக்கும் படத்தை இயக்க இருக்கிறார்.
பிரபாஸ் 21 என தற்காலிகமாக பெயரிடப் பட்டு இருக்கும் இந்த திரைப்படத்தை தெலுங்கு சினிமாவின் பழமையான நிறுவனங்களில் ஒன்றான வைஜெயந்தி மாலா மூவிஸ் தயாரிக்க இருக்கிறது. மற்ற தொழில்நுட்ப கலைஞர்கள் விரைவில் அறிவிக்கப்படுவார்கள் எனத் தெரிகிறது.
சாஹோ தோல்வியால் இப்போது நல்ல கதையம்சம் மற்றும் திறமையான இயக்குனர்களின் படங்களில் நடிக்க பிரபாஸ் முடிவு செய்துள்ளார்.





