என் கேரக்டரே வேற!.. என்னை யாருனு நினைச்சீங்க?.. பிக்பாஸில் சைலண்டா இருந்ததன் காரணத்தை கூறிய ஜித்தன் ரமேஷ்..

Published on: May 10, 2023
ram
---Advertisement---

கோலிவுட்டில் வாரிசு நடிகர்களின் ஆதிக்கம் அதிகமாக தான் இருக்கின்றன. இயக்குனரின் மகன் ,தயாரிப்பாளரின் மகன், நடிகரின் மகன் என வாரிசுகளின் ஆதிக்கம் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. அந்த வகையில் ஒரே குடும்பத்தில் இருந்து இரண்டு நடிகர்கள் சினிமாவில் ஒரே நேரத்தில் ஆதிக்கம் செலுத்தி வந்தனர். அது வேறு யாரும் இல்லை பிரபல சினிமா தயாரிப்பு நிறுவனரான ஆர்பி சவுத்ரியின் மகன்கள் நடிகர் ஜீவா மற்றும் நடிகர் ஜித்தன் ரமேஷ்.

ramesh
ramesh

இவர்களில் நடிகர் ஜீவா ஓரளவுக்கு வெற்றி படங்களில் நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று திகழ்கிறார் .ஆனால் ஜித்தன் ரமேஷ் ஒரு சில படங்களில் மட்டும் நடித்திருந்தாலும் ஏனோ மக்கள் மனதை அந்த அளவுக்கு ஆட்கொள்ளவில்லை என்று தான் கூற வேண்டும். ஜித்தன் ரமேஷ் நல்ல நடிகராகவும் ஒரு நல்ல டான்ஸர் ஆகவும் இருந்து வருகிறார் .தற்போது தனது தயாரிப்பு நிறுவனத்தை ஜீவாவுடன் சேர்ந்து அவரும் கவனித்து வருகிறார்.

தொடர்ந்து வாய்ப்புகள் குறையவே விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸில் கலந்துகொண்டு மக்களிடையே வரவேற்பை பெற்றார் ஜித்தன் ரமேஷ். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஜித்தன் ரமேஷின் வாழ்க்கையில் ஒளியேற தொடங்கியது .தற்போது மூன்று படங்களில் கமிட்டாகி நடித்துக் கொண்டு வருகிறார். சமீபத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் லீடு ரோலில் நடிக்கும் பர்கானா படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் ஜித்தன் ரமேஷ்.

ramesh1
ramesh1

இந்த நிலையில் ஜித்தன் ரமேஷ் சமீபத்தில் ஒரு தனியார் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு பேட்டி ஒன்று அளித்தார். அதில் தன்னுடைய வாழ்க்கை பற்றியும் பிக் பாஸில் கலந்து கொண்ட அனுபவத்தை பற்றியும் தற்போது உள்ள தன் நிலையைப் பற்றியும் பல தகவல்களை பகிர்ந்திருக்கிறார். பிக் பாஸ் செல் ஜித்தன் ரமேஷ் மிகவும் விமர்சனத்திற்கு உள்ளானார்.

அதாவது எந்த நேரமும் தூங்குவது, சுறுசுறுப்பாக இல்லாமல் இருப்பது, சண்டை நடக்கும் இடங்களில் அமைதியாக போவது, சில நேரங்களில் கண்டுகொள்ளாமல் இருப்பது என மக்களை அவ்வப்போது எரிச்சல் அடைய செய்தார். இதனாலையே மக்கள் அவரை சில தினங்களுக்குப் பிறகு எவிக்ட் செய்து பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றி விட்டனர்.

ramesh2
ramesh2

இந்த நிலையில், தான் ஏன் பிக் பாஸ் வீட்டில் அவ்வாறு நடந்து கொண்டேன் என்ற காரணத்தை கூறியுள்ளார். அதாவது அவருடைய அப்பா ஒரு பெரிய தயாரிப்பாளர் .தன்னுடைய தம்பி ஒரு முன்னணி நடிகர், தானும் ஒரு நடிகர் .அதனால் அந்த வீட்டில் என்னால் ஏதாவது கலவரமோ சண்டையோ ஏற்பட்டால் அது என்னையும் என் குடும்பத்தைச் சேர்ந்த மற்றவர்களையும் அவர்களின் இமேஜையும் பாதிக்கும் என்ற காரணத்தினாலேயே நான் பொறுமையாக நடந்து கொண்டேன். இல்லாவிட்டால் நான் வேற மாதிரி ஆடியிருப்பேன் என்று ஜித்தன் ரமேஷ் கூறியிருக்கிறார்.

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.