என் 12 வருஷ உழைப்பு அவர்கிட்ட தோத்து போயிடுச்சு… தனுஷ் அப்பாவை அசர வைத்த இளையராஜா!…

Published on: May 10, 2023
---Advertisement---

தமிழ் இசை கலைஞர்களில் மிகவும் முக்கியமானவர் இசையமைப்பாளர் இளையராஜா. சிறு வயதிலேயே திரைத்துறைக்கு வந்த இளையராஜா இப்போது வரை இசையில் ஒரு முடி சூடா மன்னனாகவே இருந்து வருகிறார். இளையராஜா இசைக்காக ஒரு மக்கள் கூட்டம் திரையரங்கிற்கு படம் பார்க்க வந்தது.

இதனால் இளையராஜாவின் இசையால் பல படங்கள் வெற்றி கண்டது. பல கதாநாயகர்களின் படங்கள் பெரும் வெற்றி அடைவதற்கு ஒரு வகையில் இளையராஜாவும் கூட காரணமாக இருந்தார். அப்படி இளையராஜாவின் இசைக்காக ஓடிய திரைப்படங்களில் ராஜ்கிரணின் படங்களும் அடங்கும்.

ராஜ்க்கிரண் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகி பிறகு தயாரிப்பாளர், இயக்குனர் என பல துறைகளிலும் கால் பதித்தார். அவரே நடித்து இயக்கிய அரண்மனை கிளி திரைப்படம் இன்றும் மக்கள் மத்தியில் பிரபலமான திரைப்படமாகும். அதே போல மற்றொரு திரைப்படம் என் ராசாவின் மனசிலே.

இந்த திரைப்படத்தை இயக்குனர் கஸ்தூரி ராஜா இயக்கினார். உதவி இயக்குனராக இருக்கும்போதே அவர் அந்த படக்கதையை எழுதியிருந்தார். கிட்டத்தட்ட 12 வருடமாக அந்த படத்தின் கதையை மெருகேற்றியிருந்தார் கஸ்தூரி ராஜா.

வியக்கவைத்த இளையராஜா:

இந்த நிலையில் படத்திற்கான பாடல்கள் இன்னும் சிறப்பாக இருக்க வேண்டும் என நினைத்த கஸ்தூரி ராஜா அதை படமாக்கியப்பிறகு மொத்த படத்தையும் இளையராஜாவிடம் போட்டு காட்டி அதற்கு இசையமைக்குமாறு கூறினார். அதில் முக்கியமான ஒரு செண்டி மெண்ட் காட்சிக்கு பெண் மனசு ஆழமுன்னு ஆம்பிளைக்கு தெரியும் என்கிற பாடலை போட்டிருந்தார் இளையராஜா.

அதை கேட்டதும் ஒரு நிமிடம் அசந்து போயுள்ளார் கஸ்தூரி ராஜா. ஒரு பேட்டியில் இதுக்குறித்து கூறும்போது 12 வருஷமாக ஒரு படத்தின் கதையை எழுதி வந்து இளையராஜாவிடம் சென்றால் அதையும் தாண்டி ஒரு விஷயத்தை அவர் தனது பாடல்களில் தருகிறார். அவர் முன்னாடி அந்த 12 வருஷ உழைப்பு தோத்து போயிடுச்சு என கூறியுள்ளார்.

இதையும் படிங்க: எம்.ஜி.ஆர் கதையே கேட்காமல் நடித்த ஒரே திரைப்படம்!.. அதுவும் அவருக்காகத்தானாம்!…

Rajkumar

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.