எம்ஜிஆரின் படத்திற்கு எடிட்டிங் வேலை பார்த்த கமல்.. இது எப்ப நடந்தது தெரியுமா?..

Published on: May 10, 2023
kamal
---Advertisement---

தமிழ் சினிமாவில் மாபெரும் வசூல் சக்கரவர்த்தியாக வலம் வந்தவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர். இவரைப் பற்றி நாள்தோறும் பல செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன. அவர் மறைந்தாலும் அவரின் புகழும் பெருமையும் இந்த உலகை விட்டு என்றுமே நீங்காது. அந்த அளவுக்கு மக்கள் செல்வாக்கு அதிகம் உள்ள நடிகராகவே எம்ஜிஆர் வலம் வந்தார்.

ஒரு நல்ல அரசியல் தலைவராகவும் மக்கள் அவரை பார்க்க ஆரம்பித்தனர். அரசியலிலும் அவர் ஜொலிக்க முடிந்தது என்றால் அதற்கு முழு காரணம் அவர் செய்த பல நல்ல செயல்கள் உதவிகள். இப்படி எம்ஜிஆர் ஐ பற்றி ஏராளமான தகவல்கள் சொல்லிக் கொண்டே போகலாம். இந்த நிலையில் பிரபல நடிகையும் தயாரிப்பாளரும் இயக்குனருமான குட்டி பத்மினி தன்னுடைய அனுபவங்களை ஒரு பேட்டியில் மூலம் பகிர்ந்து இருக்கிறார்.

அதாவது குட்டி பத்மினியும் நடிகர் கமலும் சமகாலத்து நடிகர்கள். இருவரும் ஒன்றாகவே குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பல படங்களில் நடித்திருக்கின்றனர். அன்று முதல் இன்று வரை இருவரும் நல்ல நண்பர்களாகவே இருந்து வருகின்றனர்.

kamal1
kamal1

நடிகர் கமல் இன்று ஒரு மாபெரும் ஆளுமையாக இருக்கிறார் என்றால் அவரின் கடின உழைச்சியுமே காரணமாகும். எந்த ஒரு துறையிலும் அவரின் கைப்படாமல் இருந்ததே இல்லை. எல்லா துறைகளிலும் அவரின் ஈடுபாடு அதிகமாகவே இருக்கின்றது.

அதேபோல குட்டி பத்மினியும் கமலும் சிறுவயதாக இருக்கும் போதே எம்ஜிஆரின் ஒரு படத்திற்கு எடிட்டிங் வேலை செய்துள்ளதாக குட்டி பத்மினி ஒரு பேட்டியில் கூறினார். எம்ஜிஆர் சரோஜாதேவி ஆகியோர் இணைந்து நடித்த அன்பே வா படத்தில் இருவரும் எடிட்டிங் வேலை பார்த்துள்ளோம் என கூறி இருக்கிறார்.

kamal2
kamal2

அந்த காலங்களில் எல்லாம் நெகட்டிவ் ஃபிலிம் ரோல்களாகவே இருக்கும் .அதனால் அதை கட் பண்ணுவதற்கு பிளேடை பயன்படுத்துவார்களாம். அதை பயன்படுத்தி தான் குட்டி பத்மினியும் கமலும் ஒரு காட்சியை எடிட் செய்து கட் பண்ணி ஒட்ட வைத்துள்ளதாக நடிகை குட்டி பத்மினி ஒரு பேட்டியில் கூறினார்.

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.