Connect with us
siva

Cinema News

சிவகார்த்திகேயனை முதலில் அறிமுகப்படுத்தியது நான்தான்!.. ஆனால் என்னை ஏமாத்திட்டான்.. புலம்பும் நடிகர்..

கோலிவுட்டில் டாப் நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன் விஜய் அஜித்திற்கு அடுத்தபடியாக ஒரு நிலையான அந்தஸ்தை பெற்று மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறார். குடும்பங்கள் கொண்டாடும் ஒரு நடிகராக சிவகார்த்திகேயன் திகழ்ந்து வருகிறார். அது மட்டுமில்லாமல் விஜய்க்கு எப்படி குழந்தைகள் அதிக ரசிகர்களாக இருக்கிறார்களோ அதே போல சிவகார்த்திகேயனுக்கும் குழந்தைகளின் ரசிகர் பட்டாளங்கள் நிறைந்து இருக்கின்றனர்.

siva1

sivakarthikeyan1

மிகவும் கஷ்டப்பட்டு தன்னுடைய கடின உழைப்பாலும் முயற்சியாலும் இந்த நிலைக்கு வந்தடைந்திருக்கிறார் சிவகார்த்திகேயன். விஜய் தொலைக்காட்சியில் ஒரு சாதாரண ஆங்கராக இருந்த சிவகார்த்திகேயனின் நகைச்சுவை உணர்வை பார்த்த வெள்ளி திரை அவரை எளிதாக அழைத்துக் கொண்டது.

மெரினா திரைப்படத்தின் மூலம் முதன் முதலில் சினிமாவில் அறிமுகமானார் சிவகார்த்திகேயன். அதுவும் ஹீரோவாக அறிமுகமான முதல் படம் மெரினா படம் தான். ஆனால் மூணு என்ற திரைப்படத்தின் மூலம் துணை நடிகராக சினிமாவிற்குள் நுழைந்தார். படத்தில் தனுசுக்கு நண்பராக சிவகார்த்திகேயன் நடித்திருப்பார்.

siva2

siva2

சினிமாவில் சிவகார்த்திகேயன் வருவதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் தனுஷ் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் மெரினா படத்திற்கு முன்பாகவே அவரை முதன் முதலில் சினிமாவில் ஹீரோவாக்கியது நான்தான் என்று பிரபல நகைச்சுவை நடிகரும் உதவி இயக்குனருமான செம்புலி ஜெகன் என்பவர் தெரிவித்துள்ளார்.

செம்புலி ஜெகன் 80 களின் காலகட்டத்தில் விஜயகாந்த், சத்யராஜ் ,பிரபு ,ரஜினி ஆகியோரின் படங்களில் ஒரு முக்கிய காமெடி நடிகராக நடித்திருப்பார். பாக்யராஜிடம் உதவி இயக்குனராக இருந்தவர் செம்புலி ஜெகன். நீண்ட நாட்களுக்குப் பிறகு அவர் அளித்த பேட்டியில் சிவகார்த்திகேயனை பற்றி பல சுவாரசியமான தகவலை கூறி இருக்கிறார்.

siva3

siva3

அதாவது தான் ஒரு படத்தை இயக்க வேண்டும் என்பதற்காக முதலில் சிவகார்த்திகேயனை அணுகினாராம் செம்புலி ஜெகன். அப்போது சிவகார்த்திகேயன் விஜய் தொலைக்காட்சியில் அது எது இது என்ற நிகழ்ச்சியை தொகுப்பாளராக இருந்திருக்கிறார். அப்போது சிவகார்த்திகேயனை அழைத்து பத்தாம் தேதி மேக்கப் டெஸ்ட் இருக்கிறது. உடனே செட்டிற்கு வரவும் என்று கூறினாராம்.

ஆனால் அதே தேதியில் திருச்சியில் அவருக்கு நிச்சயதார்த்தம் நடைபெற இருந்ததாம். உடனே திருச்சியில் நிச்சயதார்த்தத்தை முடித்துவிட்டு மாலை 3 மணி அளவில் கிளம்பி செட்டிற்கு வந்து விட்டாராம் சிவகார்த்திகேயன். மேக்கப் டெஸ்ட் எல்லாம் முடிந்து கிட்டத்தட்ட சிவகார்த்திகேயனை வைத்து 15 நாட்கள் படப்பிடிப்பை நடத்தி இருக்கிறார் செம்புலி ஜெகன்.

siva4

siva4

ஆனால் இதனிடையில் யார் என்ன செய்தார்களோ என்று தெரியவில்லை என்றும் என்னிடம் இருந்த 30 லட்சம் ரூபாயை எடுத்து விட்டதாகவும் அதனால் அந்தப் படம் அப்படியே நின்று விட்டதாகவும் கூறினார். மேலும் சிவகார்த்திகேயனும் இதைப் பற்றி எதுவும் என்னிடம் சொல்லாமலும் எதைப்பற்றியும் கேட்காமலும் திடீரென்று கிளம்பிவிட்டார். அதிலிருந்து சிவகார்த்திகேயன் என்னிடம் பேசுவதுமில்லை, நானும் அவரிடம் பேசுவதும் இல்லை. இது வரைக்கும் ஒரு போன் செய்து கூட என்னாயிற்று? என்ன நடந்தது? என்று கூட என்னிடம் கேட்கவில்லை என்று மிகவும் வருத்தத்துடன் கூறினார் செம்புலி ஜெகன்.

Continue Reading

More in Cinema News

To Top