Connect with us

Cinema News

கல்யாண சீனுக்கு பிறகு ரேப் சீன் நடிக்கணும்!.. ரெண்டு நடிகைகளுக்கு பயம் காட்டிய இயக்குனர்கள்!..

தமிழ் சினிமாவில் ரஜினி கமல் காலக்கட்டத்தில் சில விஷயங்கள் அதிகமாக சினிமாவில் வருவதை காணலாம். உதாரணமாக கிராமத்தில் பிரச்சனை செய்யும் பண்ணையார். அவரை தட்டி கேட்கும் கதாநாயகன் மாதிரியான சில காட்சிகள் அதிக படங்களில் இடம் பெறுவதை காணலாம்.

அதிலும் கற்பழிப்பு காட்சிகளை அப்போது சினிமாவில் மிக அதிகமாக காண முடியும். சினிமாவில் அறிமுகமான சில காலங்களிலேயே நடிகைகளுக்கு இந்த மாதிரியான காட்சிகளில் நடிக்க வேண்டிய சூழல் ஏற்படும். ஆனால் இது நடிகைகள் பலருக்கும் பதற்றத்தை ஏற்படுத்தும்.

ஏனெனில் சினிமாவிற்கு புதிதாக வந்திருக்கும்போது எப்படி உடனே இந்த மாதிரியான காட்சிகளில் நடிப்பது என அவர்களுக்கு தயக்கமாக இருக்கும். நடிகை சுஹாசினிக்கு இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது. 1982 ஆம் ஆண்டு சுஹாசினி ரகுவரனுடன் சேர்ந்து நடித்த திரைப்படம் மருமகளே வாழ்க.

இந்த படப்பிடிப்பிற்கு சுஹாசினி அவரது அக்காவையும் அழைத்துக்கொண்டு வந்திருந்தார். அப்போது அவரிடம் காட்சியை கூறிய இயக்குனர் “இன்று திருமண காட்சி எடுக்கிறோம். நாளை ஒரு ரேப் காட்சியை எடுக்கிறோம்” என கூறியுள்ளார். இதை கேட்டதும் சுஹாசினியின் சகோதரி அதிர்ச்சியாகி வீட்டிற்கே சென்றுவிட்டாராம்.

அதே மாதிரி நடிகை ரேவதி ரஜினிகாந்திற்கு ஜோடியாக நடித்த படம் கை கொடுக்கும் கை, இந்த படத்தில் கண் தெரியாத கதாபாத்திரத்தில் ரேவதி நடித்திருப்பார். இதிலும் அவருக்கு ஒரு கற்பழிப்பு காட்சி இருக்கும். ஆனால் கற்பழிப்பு காட்சியில் நடிக்க ரேவதிக்கு விருப்பமில்லை.

எனவே அவர் இயக்குனர் மகேந்திரனிடம் சென்று இந்த காட்சியை நீக்கி விடுங்களேன் என கேட்டுள்ளார். அதற்கு மகேந்திரன் எவ்வளவு டீசண்டாக அந்த காட்சியை எடுக்க முடியுமோ? அப்படி எடுக்கிறேன் என ரேவதிக்கு ஆறுதல் கூறியுள்ளார்.

அதே போல அந்த காட்சியை எடுத்துள்ளார் மகேந்திரன். கற்பழிப்பு காட்சிகளில் கதாநாயகிகள் இப்படியான சங்கடங்களை அனுபவித்துள்ளனர் என்பது அவர்கள் பேட்டி அளிக்கும்போதுதான் தெரிகிறது.

இதையும் படிங்க: சென்னைக்கு வா நான் பாத்துக்குறேன்… பாரதிராஜா பேச்சை கேட்டு மோசம் போன பிரபலம்!..

author avatar
Rajkumar
Continue Reading

More in Cinema News

To Top