கோடி ரூபாய் கொடுத்தாலும் அந்த சீன்ல நடிக்க மாட்டேன்… மனோபாலாவுக்கு இருந்த வீக்னஸ் என்ன தெரியுமா?

Published on: May 11, 2023
---Advertisement---

தமிழில் உள்ள நகைச்சுவை நடிகர்களில் மிகவும் முக்கியமானவர் நடிகர் மனோபாலா. இயக்குனர் பாரதி ராஜாவிடம் உதவி இயக்குனராக இருந்து படம் எடுக்க கற்றுக்கொண்டவர் மனோபாலா. ஆனால் இயக்குனராக தமிழ் சினிமாவில் அவரால் பெரிதாக சாதிக்க முடியவில்லை.

எனவே நகைச்சுவை நடிகராக  களம் இறங்கினார் மனோபாலா. வழக்கமாக நகைச்சுவை நடிகர்கள் சிலர் வார்த்தையால் நகைச்சுவை பேசி மட்டுமே நகைச்சுவை செய்வார்கள். நடிகர் எஸ்.வி சேகர் போன்ற நடிகர்கள் இந்த ரக காமெடிகளை செய்வார்கள்.

ஆனால் உடல் பாவனையிலேயே நகைச்சுவை காட்ட கூடியவர்கள்தான் வெகு காலமாக சினிமாவில் நகைச்சுவை கதாபாத்திரமாக இருந்துள்ளனர். அப்படி இருந்த நடிகர்களில் மனோபாலாவும் முக்கியமானவர்.

மனோபாலாவிற்கு இருந்த பயம்:

அவரது மறைவிற்கு பிறகு அவரை பற்றிய பல தகவல்களை பார்க்க முடிகிறது. முன்பு ஒரு பேட்டியில் அவர் பேசும்போது சினிமா குறித்து பல தகவல்களை பகிர்ந்திருந்தார். அப்போது சந்தான பாரதி, கமல்ஹாசன், எஸ்.வி சேகர் என பலரும் ஆழ்வார் பேட்டையில் ஒன்று கூடி திரைப்படங்கள் பற்றி பேசி வருவது வழக்கம்.

Manobala
Manobala

அப்போதெல்லாம் அவர்கள் வளர்ந்த நடிகர்களாக இருக்கவில்லை. மனோபாலாவை அவருக்கு கரப்பான் பூச்சி மற்றும் பாம்பை கண்டால் பயம். கோடி ரூபாய் கொடுத்து நடிக்க சொன்னாலும் அந்த காட்சியில் கரப்பான் பூச்சி, பாம்பு இருக்கும் என்றால் அவர் நடிக்க மாட்டார். அந்த பேட்டியில் இந்த விஷயத்தை அவர் பகிர்ந்திருந்தார்.

இதையும் படிங்க: மனோபாலாவுக்கு வந்த இரண்டு ஃபோன் கால்கள்.. அதிர்ஷ்டம்னா இதுதான் போல!

Rajkumar

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.