காப்பி அடித்த கதை!.. கமலால் கேன்சலான ஷூட்டிங்!.. களத்தூர் கண்ணம்மாவில் இவ்வளவு நடந்ததா?!..

Published on: May 12, 2023
kalathur
---Advertisement---

திரையுலகில் கமல்ஹாசன் ஐந்து வயது சிறுவனாக அறிமுகமான திரைப்படம் களத்தூர் கண்ணம்மா. அம்மாவும் நீயே அப்பாவும் நீயே என கமல் பாடுவதை திரையில் பார்த்தால் அவ்வளவு அழகாக இருக்கும். ஜெமினி கணேசனும் சாவித்ரியும் முக்கிய வேடத்தில் நடித்து இப்படம் 1960ம் வருடம் வெளியானது. ஆனால், இந்த படம் எடுக்கப்பட்ட போது நடந்த விஷயங்கள் பலருக்கும் தெரியாது.

kalathur

இப்படத்தை ஏவிஎம் நிறுவனம் தயாரித்திருந்தது. ஏவி மெய்யப்ப செட்டியாரிடம் நடிகர் மற்றும் கதாசிரியர் ஜாபர் சீதாராம் ஒரு கதை சொன்னார். இது பிடித்துப்போக களத்தூர் கண்ணம்மா படம் உருவானது. இயக்குனர் டி.பிரகாஷ்ராவ் படத்தை இயக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஜெமினி, சாவித்ரி மற்றும் 5 வயது சிறுவனாக கமல் நடிக்க படப்பிடிப்பு துவங்கப்பட்டது.

kalathur

ஒருநாள் படப்பிடிப்பில் கமல் கீழே விழுந்துவிட ‘நான் நடிக்க மாட்டேன் என அடம்பிடித்து அழுதார். அதனால் அன்று படப்பிடிப்பு கேன்சல் ஆனது. மறுநாள் அவரை சமாதானம் செய்து படப்பிடிப்பு நடந்தது. அதேபோல் ஒரு பாடல் காட்சி தொடர்பாக இயக்குனர் பிரகாஷ்ராவுக்கும், மெய்யப்ப செட்டியாருக்கும் இடையே கருத்து வேறுபாடு எழ பிரகாஷ் ராவ் இந்த படத்திலிருந்து விலக அவருக்கு பதில் மீதி படத்தை பீம்சிங் இயக்கினார்.

kalathur

படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த போது ஜாபர் சீதாராம் மெய்யப்ப செட்டியாரிடம் ஒரு குண்டை தூக்கி போட்டார். Nobody’s child என்கிற ஆங்கில படத்தின் கதையையே தமிழுக்கு ஏற்றது போல் மாற்றியே களத்தூர் கண்ணம்மா படத்தின் கதையை உருவாக்கியதாகவும், தற்போது அதேபோன்ற கதையில் ‘கடவுளின் குழந்தை’ என்கிற படம் உருவாகி வருவதாகவும் சொல்ல மெய்யப்ப செட்டியார் அதிர்ச்சியடைந்தார்.

எனவே, வேகமாக படம் முடிக்கப்பட்டு 1960ம் வருடம் ஆகஸ்டு மாதம் வெளியாகி இப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. ஆனால், ‘கடவுளின் குழந்தை’ திரைப்படம் தோல்வியடைந்தது.

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.