அல்லாவுக்கு பதில் அம்மா என்று வசனத்தை மாற்றிய எம்.ஜி.ஆர்… கடுப்பான இயக்குனர்… ஏன் அப்படி செய்தார் தெரியுமா?

Published on: May 12, 2023
MGR
---Advertisement---

எம்.ஜி.ஆர் அதிமுகவை தொடங்கி அவரது கடைசி தருணம் வரை தமிழக முதல்வராக திகழ்ந்தார் என்பதை பலரும் அறிவார்கள். ஆனால் அவர் தொடக்கத்தில் திராவிட முன்னேற்ற கழகத்தைச் சேந்தவராக இருந்தார். அறிஞர் அண்ணாவின் கொள்கைகளின் மீது மிகத் தீவிரமாக ஈடுபாடு கொண்டிருந்தார்.

அந்த சமயத்தில் அவர் நடித்த திரைப்படம்தான் “அலிபாபாவும் நாற்பது திருடர்களும்”. இத்திரைப்படத்தை மார்டன் தியேட்டர்ஸ் டி.ஆர்.சுந்தரம் தயாரித்து இயக்கியிருந்தார். இதில் எம்.ஜி.ஆர் ஏற்று நடித்திருந்த அலிபாபா கதாப்பாத்திரம் ஒரு இஸ்லாமிய கதாப்பாத்திரம்.

Alibabavum 40 thirudargalum
Alibabavum 40 thirudargalum

இந்த நிலையில் அத்திரைப்படத்தில் எம்.ஜி.ஆர், “அல்லாவின் மீது ஆணை” என்று ஒரு வசனத்தை பேசுவதாக இருந்தது. ஆனால் எம்.ஜி.ஆர் அந்த சமயத்தில் திமுகவில் இருந்ததால் அந்த வசனத்தை பேச தயங்கினார்.

அத்திரைப்படத்தின் வசனக்கர்த்தாவான ஏ.எல்.நாராயணனிடம் அந்த வசனத்தை அம்மா மீது ஆணையாக என்று மாற்றித்தரமுடியுமா என கேட்டார். ஆனால் அதற்கு நாராயணன், “இயக்குனரை மீறி என்னால் ஒன்றும் செய்யமுடியாது. நீங்கள் அவரிடமே பேசிக்கொள்ளுங்கள்” என கூறியிருக்கிறார்.

TR Sundaram
TR Sundaram

ஆனால் எம்.ஜி.ஆர், டி.ஆர்.சுந்தரத்திடம் கேட்பதற்கு தயங்கினார். அதன் பின் அந்த காட்சி படமாக்கப்பட்டபோது, எம்.ஜி.ஆர், “அம்மாவின் மீது ஆணை” என்று வசனத்தை மாற்றிப்பேசினார். உடனே கட் சொன்ன டி.ஆர்.சுந்தரம், “இந்த வசனம் அம்மா என்று ஆரம்பிக்கக்கூடாது. அல்லா என்றுதான் ஆரம்பிக்க வேண்டும். அலிபாபாவுக்கு தேவை அல்லாதான், அம்மா இல்லை” என்று கூறினார். அதன் பின் வேறு வழியில்லாமல் “அல்லாவின் மீது ஆணை” என்ற வசனத்தை பேசி நடித்தாராம் எம்.ஜி.ஆர்.

இதையும் படிங்க: காப்பி அடித்த கதை!.. கமலால் கேன்சலான ஷூட்டிங்!.. களத்தூர் கண்ணம்மாவில் இவ்வளவு நடந்ததா?!..

Arun Prasad

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.