
Cinema News
ஜெயலலிதா உறவினர்களை ஏன் ஒதுக்கி வைத்தார் தெரியுமா?!.. இவ்வளவு நடந்திருக்கா!..
Published on
By
சிறுமியாக இருக்கும்போதே படிப்பில் கெட்டியாக இருந்த ஜெயலலிதா பின்னாளில் பேராசிரியராகவோ அல்லது எழுத்தாளராகவோ ஆகவேண்டும் என ஆசைப்பட்டார். ஆனால், அவரின் அம்மா வற்புறுத்தியதால் வேறுவழியின்றி சினிமாவில் நடிக்கும் நிலை அவருக்கு ஏற்பட்டது. உண்மையில் அவருக்கு நடிப்பின் மீது ஆசையே வந்தது இல்லை. நடிப்பை விட்டு வெளியேறி ஒரு அமைதியான வாழ்க்கையை வாழ வேண்டும் என்றுதான் அவர் ஆசைப்பட்டார். ஆனால், காலம் அவரை சினிமா, அதன்பின் அரசியல் என கொண்டு சென்றுவிட்டது. இதை அவரே ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.
உண்மையில் அரசியல்வாதி ஆகும் ஆசையெல்லாம் அவருக்கு இருந்ததே கிடையாது. அம்மாவால் எப்படி நடிக்க வந்தாரோ, அதேபோல் எம்.ஜி.ஆ.ரால் அரசியலுக்கு வந்தார். அவர் அரசியலில் ஈடுபடும்போது அவருடன் அவரின் உறவினர்கள் இருந்தனர். போயஸ்கார்டனில் உள்ள வேதா இல்லத்திலேயே அனைவரையும் ஜெயலலிதா தங்க வைத்திருந்தார்.
ஒருமுறை கடுமையான டயட்டை ஜெயலலிதா பின்பற்றி வந்தார். அப்போது வீட்டில் புத்தகம் படித்துக்கொண்டிருந்த போது மயக்கமடைந்தார். ஜெ.வின் உறவினர்களும், வேலை ஆட்களும் என்ன செய்தும் அவருக்கு மயக்கம் தெளியவில்லை. எனவே, இந்த தகவலை ஜெ.வின் மேனேஜரிடம் சொல்ல, அவர் எம்.ஜி.ஆரிடம் சொல்லிவிட்டார். உடனே அங்கு சென்ற எம்.ஜி.ஆர் ஜெ.வை மருத்துவமனையில் அனுமதிக்க ஏற்பாடு செய்தார்.
அப்போது வீட்டின் பீரோ சாவியை யார் வைத்துக்கொள்வது என்பதில் ஜெ.வின் உறவினர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதைப்பார்த்த எம்.ஜி.ஆர் அந்த சாவியை அவரே வாங்கி வைத்துக்கொண்டார். ஜெயலலிதா சிகிச்சை முடிந்து வீட்டுக்கு வந்தபின் அவரிடம் அந்த சாவியை ஒப்படைத்தார்.
உறவினர்கள் நடந்து கொண்ட விதத்தை கேள்விப்பட்டு ஜெயலலிதா மனமுடைந்து போனார். அதுதான் அவர் உறவினர்களை ஒதுக்கி வைத்ததற்கும், எம்.ஜி.ஆரை நம்பியதற்கும் முக்கிய காரணமாக இருந்தது.
Idli kadai: தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் இட்லி கடை. இந்த படத்தை அவரே இயக்கி அதில் நடிக்கவும் செய்திருக்கிறார்....
Vijay: கரூரில் நடந்த அந்த கோர சம்பவத்தை யாராலும் அவ்வளவு சீக்கிரம் மறந்துவிட முடியாது. விஜயின் தேர்தல் பரப்புரையின் போது 41...
Rajinikanth: தமிழ் சினிமாவில் மட்டுமில்லாமல் இந்திய சினிமா அளவிலும் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். சினிமாவிற்கு வந்து 50...
Soori: கோலிவுட்டில் பல படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானவர் சூரி. துவக்கத்தில் சின்ன சின்ன வேடங்களில் நடித்த சூரி வெண்ணிலா கபடிக்குழு...
Vijay Devarakonda: கன்னட சினிமாவில் நடிக்க துவங்கி அதன்பின் தெலுங்கு சினிமாவுக்கு சென்று ரசிகர்களிடம் பிரபலமாகி தமிழ், ஹிந்தி என கலக்கி...