Connect with us
vali

Cinema News

உன் காசு வேணாம் போடா!.. தயாரிப்பாளரிடம் கடுப்பான வாலி.. எம்.ஜி.ஆர் என்ன செய்தார் தெரியுமா?..

திரையுலகை பொறுத்தவரை பாடல்கள் எழுதும் கவிஞர்கள் எப்போதும் கொஞ்சம் கர்வத்துடன் இருப்பார்கள். யாரேனும் அவர்கலின் சுயமரியாதையை அவமதிப்பு செய்தால் பொங்கியெழுந்து விடுவார்கள். அது கவிஞர்களுக்கு உரித்தான ஒன்றாகும். இதற்கு பல உதாரணங்கள் உண்டு…

எம்.ஜி.ஆருக்கு பல காதல் மற்றும் தத்துவ பாடல்களை எழுதியவர் கவிஞர் வாலி. ஆனால், அதையெல்லாம் எழுதியது கவிஞர் கண்ணதாசன் என ரசிகர்கள் நினைத்தனர்.
ஆனால், அது எல்லாவற்றையும் எழுதியவர் வாலிதான்.

vali

ஒருமுறை வாலி தனது மனைவியை பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதித்திருந்தார். மருத்துவர்கள் சிசேரியன் என சொல்லிவிட்டனர். எனவே, அவர் டென்ஷனில் இருந்தார். அப்போது அன்னமிட்ட கை என்கிற படத்தில் எம்.ஜி.ஆர் நடித்து கொண்டிருந்தார். அந்த படத்தின் தயாரிப்பாளர் சிவசாமி ஐயர் அவருக்கு தொலைப்பேசியில் அழைத்து ‘உடனடியாக ஒரு பாடல் வேண்டும். உடனே படப்பிடிப்புக்கு செல்ல வேண்டும். எம்.ஜி.ஆர் தயாராக இருக்கிறார்’ என கூறியுள்ளார்.

vali

vali

அதற்கு வாலி ‘என் மனைவிக்கு குழந்தை பிறக்கவுள்ள நிலையில் நான் எப்படி வரமுடியும்’ என கேட்க, அதற்கு அந்த தயாரிப்பாளர் ‘நீயா ஆபரேஷன் செய்ய போகிறாய்?’ என கேட்க, கடுப்பான வாலி ‘போன கீழ வைடா. நான் கறி திங்கிற பாப்பான். எங்கிட்ட வச்சிக்காத.. உன் பாட்டும் வேண்டாம்.. காசும் வேண்டாம்’ எனக்கூறிவிட்டு அழைப்பை துண்டித்துவிட்டார்.

அடுத்த நாள் மருத்துவமனைக்கு வந்த எம்.ஜி.ஆர் வாலியின் மனைவி மற்றும் குழந்தையை பார்த்துவிட்டு குழந்தையின் கையில் ஒரு தங்கச்சங்கிலையை வைத்துவிட்டு வாலியிடம் ‘தயாரிப்பாளர் உங்களிடம் பேசிய முறை தவறுதான். ஆனால், எனக்கு பாடல் வேண்டும். ஒன்றும் அவசரமில்லை’ என சொல்லிவிட்டு சென்றாராம். அதன்பின் அந்த பாடலை வாலியே எழுதி கொடுத்தார்.

Continue Reading

More in Cinema News

To Top