Connect with us
goundamani

Cinema News

சினிமாவுக்கு முன்பே கவுண்டமணி – இளையராஜா – செந்தில் கூட்டணி!.. அட எங்க தெரியுமா?

தமிழ் சினிமாவில் காமெடியில் உச்சம் தொட்டவர் கவுண்டமணி. இவரும் செந்திலும் திரையில் வருவதை பார்த்தாலே ரசிகர்கள் சிரிக்க துவங்கிவிடுவார்கள். 70களின் இறுதியில் தமிழ் சினிமாவில் அறிமுகமான கவுண்டமணி பல வருடங்கள் தமிழ் சினிமா ரசிகர்களை சிரிக்க வைத்தார். படத்தின் கதையோடு தொடர்பு இல்லை என்றாலும் தனி ட்ராக்காக இவரும், நடிகர் செந்திலும் இணைந்து காமெடி செய்து ரசிகர்களை சிரிக்க வைத்தனர். பல படங்களின் வெற்றிக்கே இவர்களின் நகைச்சுவை பெரிய பலமாக இருந்துள்ளது.

goundamani

goundamani

கிட்டத்தட்ட 30 வருடங்களுக்கும் மேல் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக கவுண்டமணி வலம் வந்தார். தற்போது வயதாகி விட்டதால் சினிமாவில் அதிகமாக அவர் நடிப்பதில்லை. ஆனாலும், இப்போது வரை அவரின் இடத்தை யாராலும் பிடிக்க முடியவில்லை. இன்னும் சொல்லப்போனால் திரையுலகை பொறுத்தவரை இப்போது காமெடிக்கு பஞ்சம் நிலவுகிறது என்றுதான் சொல்ல வேண்டும்.

சினிமாவில் நடிப்பதற்கு முன் நாடக நடிகராக இருந்தவர்தான் கவுண்டமணி. அவரின் நிஜமான பெயர் சுப்பிரமணி. நாடகத்தில் எதிரே இருப்பவர் என்ன வசனம் பேசினாலும் அதற்கு அவர் ஒரு கவுண்ட்டர் கொடுப்பார். அதனாலேயே கவுண்ட்டர் மணி என பெயர் வந்தது. நாளைடைவில் அது கவுண்டமணியாக மாறிவிட்டது.

ilayaraja

ilayaraja

இதில் ஆச்சர்யம் என்னவெனில் இவர் நடித்த பல நாடகங்களுக்கு இளையராஜா இசையமைத்துள்ளார் என்பதுதான். எனவே, அப்போதே கவுண்டமணி – இளையராஜா – கங்கை அமரன் ஆகியோருக்கு நல்ல நட்பு இருந்துள்ளது. நாடகத்தில் நாங்கள் ஒன்றாக வேலை செய்யும்போது கவுண்டமணியின் காமெடிக்கு நாங்கள் அடிமை என ஒருமுறை கங்கை அமரனே ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.

goundamani

அதே கங்கை அமரன் இயக்கிய ‘வில்லுப்பாட்டு’ படத்தில் செந்திலிடம் கவுண்டமணி ‘ஏன்னே சங்கீதம்னா உங்களுக்கு ரொம்ப பிடிக்குமா?’ என கேட்பார் அதற்கு கவுண்டமணி ‘அந்த காலத்துல நானும் இளையராஜாவும் நாடகத்துல இருக்கும்போது அவரின் வாசிப்ப கேட்டு ரொம்ப பிடிச்சுப்போச்சு.. அவர் அப்படி போயிட்டாரு.. நான் இப்படி வந்துட்டேன்’ என சொல்வார். உண்மையில் நடந்ததைத்தான் கவுண்டமணி வசனமாக பேசியிருப்பார். அதேபோல், கவுண்டமணி நடிக்கும் நாடகங்களில் திரையை கழட்டி மாட்டும் வேலையைத்தான் செந்தில் செய்து வந்துள்ளார். அதன்பின் அவரும் சினிமாவில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து பிரபலமானது குறிப்பிடத்தக்கது.

Continue Reading

More in Cinema News

To Top