Connect with us

Cinema News

எவனோ புரளியை கிளப்பிவிட்டான்… இப்ப நான் சிக்கி கிட்டேன்.. இயக்குனரிடம் புலம்பிய கவுண்டமணி!..

தமிழ் சினிமா நகைச்சுவை நடிகர்களில் மிக முக்கியமான இடத்தை பிடித்தவர்கள் கவுண்டமணி செந்தில். இவர்கள் இருவரும் இல்லாமல் தமிழ் சினிமாவின் வரலாற்றை எழுதவே முடியாது. அந்த அளவிற்கு ஒரு காலகட்டம் முழுவதையும் ஆக்கிரமித்து நகைச்சுவையால் மக்களை சிரிக்க வைத்தவர் கவுண்டமணி.

அவர் பெயர் கவுண்டமணி என்று ஆனதற்கு ஒரு காரணம் உண்டு. யாரைப் பார்த்தாலும் கவுண்டர் அடித்து விடுவார் என்பதால் அவரை கவுண்டர் மணி என்று அழைத்தார்கள். பிறகு கால போக்கில் அதுவே கவுண்டமணி ஆனது.

கவுண்டமணி படங்களில் வருவது போலவேதான் நிஜ வாழ்க்கையிலும்.எந்த ஒரு நடிகரையும் முகத்துக்கு முன்னால் கலாய்த்து விடுவார் கவுண்டமணி. நடிகர் சத்யராஜ் கூட ஒரு பேட்டியில் இதைப்பற்றி கூறியுள்ளார்.

ஒரு பேட்டியில் இயக்குனர் கஸ்தூரி ராஜா அவரது நினைவுகளை பகிர்ந்து கொள்ளும் பொழுது கவுண்டமணியுடன் அவருக்கு இருந்த பழக்கம் குறித்து பகிர்ந்துள்ளார். அதில் கூறும் பொழுது ”ஒரு முறை கவுண்டமணிக்கு உடல்நிலை மிகவும் சரியில்லை என்கிற செய்தி வந்தது.

”எனவே நான் எனது படக்குழுவை அழைத்து கவுண்டமணியை பார்த்து வருமாறு கூறினேன். பிறகு நானே கவுண்டமணிக்கு போன் செய்து என்ன கவுண்டமணி உங்கள் உடல்நிலை எப்படி உள்ளது? என கேட்டேன்.

அதற்கு அவர் பதிலளிக்கும்போது ”எவனோ ஒருத்தன் எனக்கு உடம்பு சரி இல்லன்னு புரளியை கிளப்பி விட்டுட்டான். லாரில சொந்தக்காரங்க கிளம்பி வராங்க. எல்லாருக்கும் இப்ப நான்தான் சோறு ஆக்கி போடணும் என கூறியுள்ளார்” அந்த நிகழ்வை கஸ்தூரிராஜா அந்த பேட்டியில் பகிர்ந்துள்ளார்.

இதையும் படிங்க: புகழின் உச்சிக்கே போனாலும் கர்வம் இல்லாத ஏஆர்.ரஹ்மான் – ‘மாமன்னன்’ இயக்குனரை மெய்சிலிர்க்க வைத்த தருணம்!

author avatar
Rajkumar
Continue Reading

More in Cinema News

To Top