
இந்நிலையில், இன்று போயஸ்கார்டனில் உள்ள தனது வீட்டின் முன்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர் ‘ டெல்லியில் நடந்த கலவரத்திற்கு மத்திய உளவுத்துறையின் தோல்வியே காரணம். கலவரத்தை அடக்க முடியாவிடில் மத்திய அரசு ராஜினாமா செய்து விட்டு போக வேண்டும். வன்முறையை தூண்டி விடுபவர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். அதே நேரம் சிஏஏ சட்டத்தை திரும்பப் பெறும் என்கிற நம்பிக்கை எனக்கு இல்லை. மேலும், சி.ஏ.ஏவுக்கு எதிராக போராடுவதால் எந்த பிரயோஜனமும் இல்லை’ என அவர் தெரிவித்தார்.
இந்நிலையில் கமல்ஹாசன் தனது டிவிட்டர் பக்கத்தில் ‘சபாஷ் நண்பர் ரஜினி அவர்களே, அப்படி வாங்க. இந்த வழி நல்ல வழி. தனி வழி அல்ல, ஒரு இனமே நடக்கும் ராஜ பாட்டை.வருக, வாழ்த்துக்கள்.’ என டிவிட் செய்துள்ளார்.
ஆனால், ரஜினி எப்போதும் பாஜகவின் ஆதரவாளர்தான். வன்முறையை தூண்டிவிடுபவர்கள் யார் என ரஜினிக்கு தெரியாதா? இப்போதும் சி.ஏ.ஏவுக்கு எதிராக போராடுவதால் எந்த பிரயோஜனமும் இல்லை என்றுதான் ரஜினி தெரிவித்துள்ளார். மறைமுகமாக பாஜகவிற்கு ஆதரவாகவே அவர் பேசியுள்ளார். இதுபுரியாமல் அவரை நீங்கள் பாராட்டி விட்டீர்கள். அவசரப்பட்டு பாராட்டி விட்டீர்கள என நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.
அதே போல், எங்கள் தலைவர் எப்போதுன் உண்மையைத்தான் பேசுவார். அவர் வழி எப்போதும் தனி வழிதான் என ரஜினி ரசிகர்கள் ஒருபக்கம் கம்பு சுத்தி வருகின்றனர்.
அவசர பட்டு கம்பு சுத்திட்டீன்களே ஆண்டவரே
— RamKumarr (@ramk8060) February 26, 2020
எங்க தலைவர் வழி எப்பயுமே தனி வழி தான்..
நாலு பேர் திட்டுவான், நாலு பேர் பாராட்டுவான், அரசியல் ஆதாயம் கிடைக்கும் னு அவரு எந்த கருத்தும் சொல்ல மாட்டாரு..
அவருக்கு எது சரினு படுதோ அத பேசுவாரு#RajinikanthSlamsCentre #Rajinikanth
— ரௌடிᴬᴺᴺᴬᴬᵀᵀᴴᴱ (@Rowdy_3_) February 26, 2020





