Connect with us

Cinema News

ரேவதியாலதான் அந்த விஷயம் நடக்காமலே போயிடுச்சு.. – மணிரத்னம் மனைவிக்கு இப்படி ஒரு ஆசையா?

தமிழில் முதல் படத்திலேயே பிரபலமாகிய கதாநாயகிகளில் முக்கியமானவர் நடிகை ரேவதி. அவரது முதல் படமான மண் வாசனை திரைப்படமே அவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது. மண்வாசனை திரைப்படத்தை தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்தார் ரேவதி.

அவற்றில் ஆண்பாவம் , புன்னகை மன்னன், மெளன ராகம் போன்ற திரைப்படங்கள் முக்கியமானவை. அப்போது தமிழ் சினிமாவில் ரேவதிக்கு அதிக மார்க்கெட் இருந்தது. ஏனெனில் மிக சிறு வயதிலேயே சினிமாவிற்கு நடிக்க வந்துவிட்டார் ரேவதி.

Revathi

Revathi

கிட்டத்தட்ட பள்ளி படிப்பை முடித்த உடனேயே ரேவதி தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகிவிட்டார். ரேவதியின் சுட்டித்தனமான குணமும், அவரது சின்ன முகமும் தொடர்ந்து அவர் கதாநாயகியாக இருப்பதற்கான வாய்ப்புகளை அதிகரித்தன. இதனால் மற்ற கதாநாயகிகளுக்கு வரும் படங்களும் கூட பிறகு ரேவதிக்கு கைமாறிய நிகழ்வுகளும் நடந்தன.

இந்த நிலையில் மணிரத்தினத்தின் மனைவியான சுஹாசினி அந்த காலகட்டத்தில் பெரும் நடிகையாக இருந்து வந்தார். அவருக்கு சிவாஜி கணேசனுடன் சேர்ந்து நடிக்க வேண்டும் என்பது மிக பெரும் ஆசையாக இருந்தது.

வாய்ப்பை இழந்த சுஹாசினி:

அதற்காக பல நாட்களாக அவர் காத்திருந்தார். அந்த நேரத்தில் லட்சுமி வந்தாச்சு என்கிற திரைப்படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார் சுஹாசினி. அந்த படத்தில் சிவாஜி கணேசனும் நடிக்க இருந்ததால் அவருடன் நடிக்க போகிறோம் என்று மிகவும் மகிழ்ச்சியாக இருந்தார் சுஹாசினி.

ஆனால் கடைசி நேரத்தில் அந்த படம் ரேவதிக்கு கை மாறியது. எனவே அந்த படத்தில் கதாநாயகியாக பிறகு ரேவதி நடித்தார். அதன் பிறகு சிவாஜியை வைத்து ஒரு படமாவது இயக்க வேண்டும் என்று நினைத்தார் சுஹாசினி.

ஆனால் கடைசிவரை அதுவும் அவரால் முடியாமல் போய்விட்டது எனவே சிவாஜியுடன் நடிக்க வேண்டும் என்கிற ஆசை சுஹாசினிக்கு நிராசையாகவே போனதற்கு முக்கிய காரணம் லட்சுமி வந்தாச்சு படத்தின் வாய்ப்பு பறிபோனதே ஆகும். இதை அவரே ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

author avatar
Rajkumar
Continue Reading

More in Cinema News

To Top