
Cinema News
16 வயதினிலே படத்தில் சர்ச்சைக்குள்ளான காட்சி… உள்ளே புகுந்து சரி செய்த பாக்கியராஜ்!.. எந்த காட்சி தெரியுமா?
Published on
By
இயக்குனர் பாலச்சந்தருக்கு பிறகு தமிழ் சினிமாவில் பெரிதாக போற்றப்படும் ஒரு இயக்குனராக இருப்பவர் பாரதிராஜா. பாரதிராஜா இயக்குனராக தோன்றிய சமகாலத்தில் வரிசையாக ஹிட் கொடுக்கும் இயக்குனராக அவர் இருந்தார். எனவே தொடர்ந்து பட வாய்ப்புகளை பெற்று வந்தார். மேலும் கிராமம் சார்ந்த படங்களை எடுப்பதில் புகழ்பெற்றவர் பாரதிராஜா.
அவற்றை தாண்டி அவரது திரைப்படங்களில் சமூக விழிப்புணர்வு சார்ந்த கருத்துக்களை பேசுவதை ஒரு கொள்கையாகக் கொண்டிருந்தார். அதனால்தான் அவருடைய உதவியாளராக இருந்த பாக்யராஜும் சினிமாவிற்கு வந்த பிறகு பாரதிராஜா போலவே சமூக சீர்திருத்த கருத்துகளை தனது படங்களில் பேசினார்.
பாரதிராஜாவின் முதல் படமான 16 வயதினிலே திரைப்படத்தின் போது பாக்யராஜ் அவருக்கு உதவி இயக்குனராக இருந்தார். அந்த படத்தில் ஒரு முக்கியமான காட்சியை பாரதிராஜா எழுதும் போது கொஞ்சம் தவறாக எழுதி இருந்தார். அதனால் இந்த காட்சி மிகவும் விமர்சனத்திற்கு உள்ளானது அப்போது பாக்யராஜ்தான் பாரதிராஜாவிற்கு உதவினார்.
மாற்றியமைத்த பாக்கியராஜ்:
16 வயதினிலே ஸ்ரீதேவி கதாபாத்திரம் டாக்டர் கதாபாத்திரத்தால் கெடுக்கப்படுவது போன்ற காட்சியை எழுதியிருந்தார் பாரதிராஜா. ஆனால் அந்த காட்சி படமாக்கப்பட்டால் அது படத்தின் வெற்றியை பாதிக்கும் என படக்குழு நினைத்தது.
எனவே அந்த காட்சியை படமாக்க வேண்டாம் என்று ஒட்டுமொத்தமாக தீர்மானித்திருந்தனர். இந்த நிலையில் அதை படித்த பாக்யராஜ் அந்த காட்சியை எப்படி மாற்றி அமைக்க முடியும் என்று பாரதிராஜாவிடம் பேசி அந்த காட்சியை அதேபோல மாற்றி அமைத்தார். அது படத்தில் நன்றாகவே ஒர்க் அவுட் ஆகி இருந்தது. பாக்கியராஜ் ஒரு பேட்டியில் இந்த விஷயத்தை பகிர்ந்திருந்தார்.
Pradeep: கோமாளி திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகி ரசிகர்களிடம் பிரபலமானவர் பிரதீப் ரங்கநாதன். ஜெயம் ரவி, யோகி பாபு ஆகியோர் முக்கிய...
Pradeep: தமிழ் சினிமாவில் ஒரு சென்ஷேசன் பிரபலமாக தற்போது அறியப்படுபவர் நடிகர் பிரதீப் ரெங்கநாதன். கோமாளி படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமான...
சின்ன வயது முதலே சினிமாவில் நடித்து வருபவர் சிம்பு. பல வருடங்களாக சினிமாவில் நடித்து வருவதால் சினிமாவை பற்றிய அறிவு அதிகம்...
விடுதலை 2 திரைப்படத்திற்கு பின் சூர்யாவை வைத்து வாடிவாசல் எடுக்க திட்டமிட்டிருந்தார் வெற்றிமாறன். ஆனால் முழுக்கதையும் ரெடி ஆகாததால் சூர்யா நடிக்க...
Parasakthi: அமரன் படத்திற்கு பின் சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தில் நடிக்க தொடங்கினார். இந்த படத்தில் சிவகார்த்திகேயன் மட்டுமில்லாமல்...