7 நாள் படப்பிடிப்புக்கு ஒரு லட்ச ரூபாய் சம்பளமா?… ஏவிஎம்-ஐ அதிரவைத்த சந்திரபாபு…

Published on: May 15, 2023
Chandrababu
---Advertisement---

சந்திரபாபு தமிழ் சினிமாவின் பழம்பெரும் காமெடி நடிகராக திகழ்ந்தவர். அதுமட்டுமல்லாது சிறந்த நடன கலைஞராகவும் பாடகராகவும் புகழ்பெற்றவர். அவர் நடிக்கும் திரைப்படங்களில் அவருக்கென பிரத்யேகமாகவே ஒரு பாடலை உருவாக்குவார்கள். அந்த பாடலை அவரே பாடுவார். அதில் அவரே நடனமும் ஆடுவார்.

அந்த காலகட்டத்தில் சந்திரபாபுக்காகவே பல திரைப்படங்கள் ஓடியது. திரைப்படங்கள் சுமாராக இருந்தாலும் சந்திரபாபு அதில் இடம்பெற்றால் போதும், மக்கள் கூட்டம் திரையரங்குகளை மொய்த்துவிடும். இந்த நிலையில் பிரபல தயாரிப்பாளரான ஏ.வி.மெய்யப்ப செட்டியார் தான் தயாரித்த ஒரு திரைப்படம் சுமாராக வந்திருந்தபடியால் சந்திரபாபுவை அணுகியிருக்கிறார். அப்போது சந்திரபாபு கேட்ட சம்பளம் அவரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

Chandrababu
Chandrababu

1959 ஆம் ஆண்டு பாலாஜி, தேவிகா ஆகியோரின் நடிப்பில் உருவான திரைப்படம் “சகோதரி”. இத்திரைப்படத்தை ஏ.பீம் சிங் இயக்க, ஏவிஎம் ஸ்டூடியோவில் இத்திரைப்படம் படமாக்கப்பட்டது. இந்த நிலையில் “சகோதரி” திரைப்படத்தின் பணிகள் முடிவடைந்தபிறகு அத்திரைப்படத்தை திரையிட்டு பார்த்தார் மெய்யப்ப செட்டியார். ஆனால் அவருக்கு அத்திரைப்படம் வெற்றுபெறும் என்று தோன்றவில்லை.

ஆதலால் இத்திரைப்படத்தில் சந்திரபாபுவை வைத்து பல காமெடி காட்சிகளை உருவாக்கலாம் என நினைத்தார். அதன்படி சந்திரபாபுவை அணுகினார் அவர். சந்திரபாபு அத்திரைப்படத்தை பார்த்துவிட்டு, “நிச்சயம் இத்திரைப்படம் ஓடாது. ஆதலால் இந்த திரைப்படத்தை ஓடவைக்க என்னால் முடிந்ததை நான் செய்கிறேன். ஆனால் எனக்கு நீங்கள் ஒரு லட்ச ரூபாய் சம்பளமாக தாருங்கள்” என கூறியிருக்கிறார். மொத்தம் படப்பிடிப்பு 7 நாட்கள்தான்.

AVM
AVM

7 நாட்களுக்கு ஒரு லட்சமா என அதிர்ச்சியுற்ற ஏவிஎம், “ஒரு நாளுக்கு பத்தாயிரம் ரூபாய் வாங்கிக்கொள்ளுங்களேன்” என கூறியுள்ளார். அதற்கு சந்திரபாபு, “சார், உங்க படத்தை ஓடவைக்குறதுக்கு என்னால் என்ன பண்ணமுடியுமோ, அதை எல்லாம் நான் பண்ண தயார். ஆதலால் 30,000 ரூபாயை எல்லாம் கணக்கில் கொள்ளாதீர்கள். 7 நாட்கள் படப்பிடிப்பிற்கு ஒரு நாளுக்கு பத்தாயிரம் என்று நீங்கள் சொல்லும் சம்பளத்திற்கு நான் இப்போது சரி என்று சொல்லிவிட்டாலும், அந்த படப்பிடிப்பை என்னால் பன்னிரண்டு நாட்களாக நீட்டிக்க முடியும். அப்படி நான் பன்னிரண்டு நாட்களுக்கு நீட்டிட்டால் நீங்கள் எனக்கு ஒரு லட்சத்து இருபதாயிரம் ரூபாய் கொடுக்க வேண்டிய நிலை வரும். எனக்கு அது எல்லாம் தேவையில்லை. நான் நிச்சயமாக நல்லபடியாக நகைச்சுவை காட்சிகளை உருவாக்கி எடுத்துக்கொடுக்கிறேன். நான் சொன்ன தொகையை தந்துவிடுங்கள்” என வெளிப்படையாகவே கூறினாராம். அதற்கு ஏவிஎம் செட்டியாரும் சரி என்று கூறியிருக்கிறார்.

அதன் பிறகுதான் “சகோதரி” திரைப்படத்திற்காக தனியாக சில காமெடி காட்சிகளை உருவாக்கி அதில் நடித்து தந்தாராம் சந்திரபாபு. அத்திரைப்படம் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்றதாம்.

Arun Prasad

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.