Connect with us
radha

Cinema News

ஹீரோவானதும் ஆசி வாங்க போன அசோகன்!.. வாழ்த்துவாருனு பாத்தா இப்படி சொல்லிட்டாரே?

தமிழ் சினிமாவில் வில்லன் கதாபாத்திரத்தில் அனைவரையும் மிரள வைத்தவர் நடிகர் அசோகன். எம்ஜிஆருக்கு மிகவும் நெருங்கிய நண்பரும் கூட.பல படங்களில் வில்லனாக நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றவர்.

அவரின் நடிப்பையும் தாண்டி அவரின் பாவனைகள், கண் புருவத்தை மேலே கீழே உயர்த்தி காட்டும் அந்த நடிப்பு இதுவரை யாரும் தமிழ் சினிமாவில் யாரும் பிறக்கவில்லை என்றுதான் கூற வேண்டும். இந்த நிலையில் அசோகன் முதன் முதலில் ‘இது சத்தியம்’ என்ற படத்தில் ஹீரோவாக நடித்தாராம்.

radha1

radha1

அதனால் இந்த செய்தியை நடிகவேள் எம்.ஆர்.ராதாவிடம் சொல்லி ஆசி வாங்க சென்றிருக்கிறார். ஏற்கெனவே அசோகனும் எம்.ஆர்.வாசுவும் பால்ய சினேகிதர்களாம். அதனால் எம்.ஆர்.ராதாவிடம் ஆசி வாங்கலாம் என சென்றாராம்.

அசோகன், தான் ஹீரோவான விஷயத்தை சொல்லி ஆசிர்வாதம் வாங்க கூடவே இன்னொரு விஷயத்தையும் சொல்லியிருக்கிறார். அதாவாது ‘இப்பொழுதுதான் எம்ஜிஆரிடமும் சிவாஜியும் ஆசி வாங்கி விட்டு வந்தேன்’ என்று சொல்லியிருக்கிறார்.

radha2

radha2

இதை கேட்டதும் எம்.ஆர்.ராதா ‘அடப்பாவி, நான் வில்லன்டா, அதனால் நான் ஆசிர்வாதம் பண்ணுவேன், அவங்க ரெண்டு பேரும் ஹீரோ ஆச்சேடா, உனக்கு எப்படிடா ஆசிர்வாதம் பண்ணுவாங்க ’ என தனக்கே உண்டான நையாண்டியுடன் கூறினாராம். அதாவது ஹீரோவாக இருக்கும் நபரிடமே ஹீரோவாக போறேனு சொன்னால் போட்டி மனப்பான்மை வரும் என்ற நோக்கத்தில் சொல்லியிருக்கிறார் எம்.ஆர்.ராதா. இதை ஒரு மேடையில் நடிகர் ராதாரவி கூறினார்.

Continue Reading

More in Cinema News

To Top