Connect with us

Cinema News

ஒட்டு துணி இல்லாமல் கதாநாயகிக்கு காட்சி!.. பாரதி ராஜா படத்தில் கிராமத்தினர் செய்த சர்ச்சை… அடக்கொடுமையே!..

தமிழ் சினிமாவில் புது வித படங்களை இயக்கிய இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் பாரதிராஜா. தமிழக கிராமங்களில் வாழும் சாதரண மனிதர்களின் வாழ்க்கையை படமாக்கியதால் மக்களுக்கு பாரதிராஜா திரைப்படங்கள் மீது அதிக ஈர்ப்பு இருந்தது.

இதனால் பாரதிராஜா ஒரு படம் இயக்குகிறார் என்றாலே அந்த படத்திற்கு அதிக வரவேற்பு இருந்தது. பாரதிராஜா அதிகப்பட்சம் கிராமங்களில் அவரது கதைகளை படமாக்குவதால் குறைந்த பட்ஜெட்டிலேயே படங்களை இயக்கிவிடுவார்.

அப்படி அவர் இயக்கிய திரைப்படங்களில் முக்கியமான திரைப்படம் கிழக்கே போகும் ரயில். கிழக்கே போகும் ரயில் திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது இயக்குனர் பாக்கியராஜ் பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக பணிப்புரிந்து வந்தார்.

கிராமத்தினர் செய்த வேலை:

அந்த படத்தின் இறுதி காட்சிகளில் ராதிகா நிர்வாணமாக ஊரை சுற்றி வருவது போன்ற காட்சி படமாக்க வேண்டும். இந்த காட்சிக்காக தோல் நிறத்தில் இருக்கும் பிரத்யேக ஆடையை கொண்டு வந்தனர் படக்குழுவினர். ஆனால் அதை அணிந்துக்கொண்டு நடிக்க முடியாது என கூறிவிட்டார் ராதிகா.

எனவே இதற்காக டூப் போட வேறொரு பெண்ணை அழைத்து அந்த காட்சியை எடுக்க இருந்தனர். ஆனால் கதாநாயகி நிர்வாணமாக நடிக்கும் காட்சி உள்ளது என்பதை அறிந்துக்கொண்ட கிராம மக்கள் அதை பார்க்க நின்று கொண்டிருந்தனர். உதவி இயக்குனராக இருந்த பாக்கியராஜ் முடிந்தவரை மக்களை அப்புறப்படுத்தினார்.

ஆனால் அங்கு இருக்கும் காம்பவுண்டிற்கு பின்னால் சிலர் ஒளிந்துக்கொண்டு படப்பிடிப்பை பார்த்துள்ளனர். அதை கவனித்த பாரதிராஜா பாக்கியராஜிடம் கூறி பிறகு அவர்களையும் விரட்டியுள்ளனர். இந்த நிகழ்வை பாக்கியராஜ் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: என்னாலதான் அந்த சரத்குமார் படம் ஃப்ளாப் ஆனுச்சு..! –  வெளிப்படையாக கூறிய இயக்குனர்…

author avatar
Rajkumar
Continue Reading

More in Cinema News

To Top