மகளுடன் பிரபல ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் நீச்சல் குளத்தில் நடிகை ஸ்ரேயா.. ஒரு நாள் வாடகை மட்டும் இம்புட்டா? ஆத்தி

Published on: May 16, 2023
shriya
---Advertisement---

இந்திய அளவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ஸ்ரேயா.

குறிப்பாக தமிழில் “உனக்கு 20 எனக்கு 18” திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் நடிகை ஸ்ரேயா. இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த “சிவாஜி” படத்தில் நடித்ததன் மூலம் மிகப் பிரபலமானவர். கடைசியாக தமிழில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தில் ஸ்ரேயா நடித்திருந்தார். சமீபத்தில் தெலுங்கில் ராஜமௌலி இயக்கத்தில் RRR படத்தில் அஜய் தேவ்கனுக்கு ஜோடியாக ஸ்ரேயா நடித்து இருந்தார்.

shriya
shriya



தமிழில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் இவர் நடித்த நரகாசூரன் படம் வெளியீட்டிற்கு தயாராக உள்ளது. கன்னட மொழியில் இவர் நடித்துள்ள கப்சா திரைப்படம், கடந்த மார்ச் மாதம் 17ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.

இவர் கடந்த 2018ஆம் ஆண்டு ரஷ்யாவைச் சேர்ந்த டென்னிஸ் வீரர் ஆண்ட்ரோ கோஸ்சீவ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். தனது கணவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்வதை வாடிக்கையாக செய்து கொண்டிருப்பார். இதற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் நிலவுகிறது.

தனக்கு குழந்தை பிறந்துவிட்டதாக சில கடந்தாண்டு ஸ்ரேயா இன்ஸ்டாகிராமில் அறிவித்து ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கினார். அந்த அளவுக்கு தனது குழந்தைப் பிறப்பு குறித்து எந்த ஒரு செய்தியையும் அதுவரை பகிராமல் ஸ்ரேயா சரண் அமைதி காத்தார். மேலும் குழந்தை 2020 ஆம் ஆண்டு லாக்டவுனில் பிறந்ததாக ஸ்ரேயா அறிவித்தார். குழந்தைக்கு ராதா என பெயரிடப்பட்டது. தற்போது குழந்தைக்கு 2 வயது ஆகுவதாகவும் தெரிகிறது.



தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை ஸ்ரேயா சரண், ஐதராபாத் நகரில் உள்ள பிரபல ஐடிசி கோகினூர் நட்சத்திர ஹோட்டலில் குடும்பத்துடன் தான் தங்கியிருக்கும் வீடியோ & புகைப்படங்களை ஸ்ரேயா வெளியிட்டுள்ளார். இந்த ஹோட்டலில் ஒருநாள் தங்குவதற்கு மட்டும் வாடகையாக 15,000 ரூபாய் முதல் 20,000 ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது.

muthu

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.