ஜெயம்ரவியை வச்சு எடுத்ததுதான் நான் பண்ண ஒரே தப்பு!.. பட தோல்வியை குறித்து இயக்குனர் ஆதங்கம்

Published on: May 17, 2023
jayam
---Advertisement---

தமிழ் சினிமாவில் முன்னனி நடிகர்களாக இருப்பவர்கள் நடிகர்கள் தனுஷ் மற்றும் ஜெயம்ரவி. இதில் தனுஷின் வளர்ச்சி அனைவராலும் பிரமிப்பாக பார்க்க முடிகின்றது. பல அவமானங்களுக்கு இடையில் தமிழ் சினிமாவில் நுழைந்து இன்று ஹாலிவுட் வரை சென்ற ஒரே தமிழ்  நடிகர் என்ற பெருமையை பெற்றவராக தனுஷ் விளங்குகிறார்.

jayam1
jayam1

இந்த நிலையில் தனுஷ் ஜெயம் ரவி பற்றிய ஒரு தகவலை இயக்குனர் சுராஜ் ஒரு பேட்டியின் மூலம் தெரிவித்தார். ஏற்கெனவே தனுஷை வைத்து சுராஜ் மாப்பிள்ளை மற்றும் படிக்காதவன் போன்ற படங்களை இயக்கியிருக்கிறார். மாப்பிள்ளை படத்தின் கதையை முதலில் தனுஷிடம் சொல்லும் போது உடனே ஓகே சொல்லிவிட்டாராம் தனுஷ்.

ஏனெனில் அந்த படத்தின் கதை தன் சொந்தக் கதையோடு ஒத்துப் போயிருந்ததால் உடனே ஓகே சொல்லியிருக்கிறார். அதை போல படிக்காதவன் படத்தின் மூலம் தான் சுராஜும் தனுஷும் முதன் முதலில் கூட்டணி அமைத்தார்கள். அந்த படத்தின் கதையையும் முதலில் சொன்னபோது ஒரு படிக்காத பையன் படிச்ச பெண்ணை காதலிக்கும் படியான கதையாக இருந்ததால் அதுவும் அவரை சேர்ந்தே இருந்ததனால் சம்மதித்தாராம்.

இந்த நிலையில் ஜெயம் ரவி நடித்த சகலகலாவல்லவன் படத்தையும் சுராஜ்தான் இயக்கினார். ஆனால் அந்தப் படத்தில் முதலில் தனுஷ் தான் நடிக்க இருந்ததாம். ஆனால் அவர் ஒரு ஆறு மாதம் காத்திருக்க சொன்னதால் ஜெயம் ரவியை தேடி போயிருக்கிறார் சுராஜ். ஆனால் அதுதான் நான் பண்ண பெரிய தப்பு என்று அந்த பேட்டியில் கூறினார் சுராஜ்.

jayam2
jayam2

ஏனெனில் படத்தின் கதைப்படி ஒரு மிடில் க்ளாஸ் பையன் அவனுக்கு சமமான ரேஞ்சில் இருக்கும் பெண்ணை காதலிக்கிறார். ஆனால் அவரின் சொந்தக்கார பெண்ணாக இருக்கும் த்ரிஷாவுக்கு வேறொரு இடத்தில் திருமணம் நிச்சயம் நடந்து பாதியிலேயே அந்த திருமணமும் நின்று விடுகிறது. அந்த பெண்ணை அந்த அவமானத்தில் இருந்து காப்பாற்ற வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக ஜெயம் ரவியின் அப்பாவாக நடித்த பிரபு ஜெயம் ரவிக்கும் திரிஷாவுக்கு திருமணத்தை நடத்தி வைக்கின்றார்.

ஆனால் த்ரிஷாவுக்கோ ஜெயம் ரவியை கண்டாலே பிடிக்காது. இங்குதான் நான் தப்பு பண்ணிட்டேன் என்று சுராஜ் கூறினார். ஏனெனில் அடிப்படையிலேயே ஜெயம் ரவி அழகானவர். ஆனால் த்ரிஷா திருமணம் செய்ய இருந்தவர் நடிகர் ஜான் விஜய். அவருக்கு ஜெயம் ரவி 100 மடங்கு அழகானவர். அப்புறம் ஏன் ஜெயம் ரவியை த்ரிஷா வெறுக்கனும் என ரசிகர்கள் யோசிக்க ஆரம்பிச்சுட்டாங்க. அதான் படம் எடுபடல என்று கூறினார்.

jayam3
suraj

ஆனால் இதுவே தனுஷ் நடித்திருந்தால் இந்த மாதிரி ஒரு கன்ஃபியூசன் வந்திருக்காது. அதனால் ஒரு படத்திற்கு இந்த நடிகர்தான் என்று இயக்குனர்கள்  நினைத்து விட்டால் எந்த காரணத்திற்காகவும் அதை மாற்றாதீர்கள் என்றும் அந்த பேட்டியில் கூறினார்.

இதையும் படிங்க : டிரஸல்லாம் கழட்டிட்டு தான் விட்டாங்க!.. அஜித் படத்தில் பட்ட அவமானங்களை கண்ணீருடன் பகிர்ந்த நடிகர்..

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.