Connect with us

Cinema News

அந்த விஷயத்தில் விஜயகாந்த் மாதிரி லெஜண்ட் சரவணன்!.. தங்கமான மனுசனா இருப்பார் போல…

எவ்வளவு பெரிய தொழிலதிபராக இருந்தாலும் அவர்களுக்கு சினிமா நட்சத்திரங்களுக்கு கிடைக்கும் புகழும் வரவேற்பும் கிடைப்பதில்லை. எனவே அதை பெறுவதற்காக சில தொழிலதிபர்கள் மக்கள் மத்தியில் தங்களை பிரபலப்படுத்தி கொள்வதுண்டு.

இதனால் தொழிலதிபர்கள் பலரும் அவர்களது நிறுவன விளம்பரங்களில் அவர்களே வருவதை பார்க்க முடியும். அதிலும் ஒரு படி மேலே போய் சினிமாவில் பிரபலமாக வேண்டும் என நினைத்தவர்தான் சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனத்தின் முதலாளியான அருள் சரவணன்.

போன வருடம் இவர் நடித்த லெஜண்ட் என்கிற திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. மாபெரும் பொருட் செலவில் உருவான இந்த திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. ஆனாலும் அடுத்த படத்தில் நடிப்பதற்காக தயாராகி வருகிறார் லெஜண்ட் சரவணன்.

லெஜண்ட் படத்தின் படப்பிடிப்பு பொள்ளாச்சியில் நடந்தது. அந்த படப்பிடிப்பின்போது படத்தில் முக்கியமாக பணிப்புரிபவர்களுக்கு மட்டும் கொடுப்பதற்காக தனியாக இளநீர் கொண்டு வரப்பட்டது. அதிலிருந்து சரவணனிற்கும் இளநீர் கொடுத்துள்ளனர்.

அப்போது மற்றவர்களை பார்த்த சரவணன் எல்லோருக்கும் இளநீர் கொடுங்க. எதுக்கு சிலருக்கு மட்டும் கொடுக்கிறீங்க என கேட்க “இல்ல சார் முக்கிய நடிகர்களுக்கு மட்டும்தான் இளநீர் என கூறியுள்ளனர். இனிமே தினமும் எல்லோருக்கும் இளநீர் கொடுங்கள் என கூறியுள்ளார் லெஜண்ட்.

இதற்கு முன்பு நடிகர் விஜயகாந்த் இதே போலவே தனது ஜூஸ் கொடுத்தால் அனைத்து ஊழியர்களுக்கும் கொடுக்க வேண்டும் என தனது படங்களில் உத்தரவிட்டிருந்தார். அதை அப்படியே தனது படங்களில் பின்பற்றியுள்ளார் லெஜண்ட் சரவணன்.

இதையும் படிங்க: ஜெயம்ரவியை வச்சு எடுத்ததுதான் நான் பண்ண ஒரே தப்பு!.. பட தோல்வியை குறித்து இயக்குனர் ஆதங்கம்

Continue Reading

More in Cinema News

To Top