Connect with us

Cinema News

சிவாஜி கணேசனை காக்க வைத்த நடிகை… கடுப்பாகி விஜய் அப்பா செய்த காரியம்!.. ரொம்ப டெரரான ஆளு போல!..

ப்ளாக் அண்ட் ஒயிட் சினிமா காலக்கட்டத்திலேயே இந்தியா முழுவதும் அனைவராலும் பிரபலமாக அறியப்பட்டவர் நடிகர் சிவாஜி கணேசன். அவரது சமகாலத்தில் பாலிவுட்டில் துவங்கி பல்வேறு மொழிகளிலும் சிவாஜி கணேசனின் நடிப்பை பார்த்து பலரும் வியந்து போனார்கள்.

ஆனால் அதற்கு அடுத்த தலைமுறை வரும்போது அவர்களுக்கு சிவாஜியை பற்றி பெரிதாக தெரிந்திருக்கவில்லை. அந்த காலக்கட்டத்தில் சிவாஜியும் கதாநாயகனாக நடிப்பதை விட்டு விட்டார். திரைப்படங்களில் அப்போது துணை கதாபாத்திரத்தில் நடித்து வந்தார் சிவாஜி.

எந்த ஒரு நடிகரும் அப்போது சிவாஜி கணேசனோடு ஒரு படமாவது நடிக்க ஆசைப்படுவார்கள். நடிகர் விஜய்க்கும் கூட அப்படியான ஆசை இருந்தது. எனவே அவரது தந்தை எஸ்.ஏ சந்திரசேகர் இயக்கத்தில் ஒன்ஸ் மோர் திரைப்படம் தயாரானது. அப்போது பாலிவுட்டில் சில படங்களில் நடித்து பிரபலமாக இருந்தார் நடிகை சிம்ரன்.

எனவே அவரை தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்த நினைத்தார் எஸ்.ஏ.சி. சிம்ரனும் கூட நடிகர் சிவாஜியை பற்றி கேள்விப்பட்டிருந்தார். ஆனால் அவரது படங்களையோ அல்லது அவரையோ சிம்ரன் பார்த்தது இல்லை. சிவாஜி கணேசனோடு ஒரு காட்சியை எடுக்க படக்குழு தயாரானது. 8 மணிக்கு படப்பிடிப்பு துவங்கவிருந்தது.

லேட்டாக வந்த சிம்ரன்:

எனவே காலை 7 மணிக்கெல்லாம் சிவாஜி கணேசன் வந்துவிட்டார். ஆனால் மணி 9 ஆனப்பிறகும் நடிகை சிம்ரன் மட்டும் வரவே இல்லை. பொதுவாக பாலிவுட்டில் 10 மணிக்குதான் படப்பிடிப்பு துவங்கும். எனவே சிம்ரன் பொறுமையாக 10 மணிக்கு படப்பிடிப்பிற்கு வந்தார்.

இதனால் கோபமான இயக்குனர் சிம்ரனை திட்ட துவங்கிவிட்டார். இன்று படப்பிடிப்பே வேண்டாம் எல்லாம் கிளம்புங்கள் என கத்த துவங்கினார் எஸ்.ஏ.சி. அப்போதுதான் நடிகர் சிவாஜி இவ்வளவு நேரம் காத்திருந்தார் என்கிற விஷயம் சிம்ரனுக்கு தெரிந்துள்ளது. உடனே சிவாஜி காலில் விழுந்து மன்னிப்பு கேட்டுள்ளார் சிம்ரன். அதன் பிறகு படப்பிடிப்பு நடந்துள்ளது.

இதையும் படிங்க: ஷாட் ரெடி என்று சொன்ன இயக்குனரை பார்த்து டைரக்டரை வரச்சொல்லுங்க என கூறிய பானுமதி… ஏன் தெரியுமா?

Continue Reading

More in Cinema News

To Top