Cinema News
அதிமேதாவி அந்த விஷயத்துல ரொம்ப வீக்.. கமலை கலாய்த்த ராதாரவி
80களிலும் சரி இப்போதும் சரி கோலிவுட்டில் பாக்ஸ் ஆபிஸில் கலக்கிக் கொண்டிருக்கும் நடிகராக வலம் வருகிறார் நடிகர் கமல்ஹாசன். இப்பொழுது விஜய், அஜித் ஆகியவர்கள் எந்த அளவுக்கு வளர்ச்சி அடைந்தாலும் கமலின் ரெக்கார்டை முறியடிக்க முடியவில்லை.
கிட்டத்தட்ட ஐந்து தசாப்தங்களுக்கும் மேலாக கோலிவுட்டில் கோலோச்சி வருகிறார். சிவாஜிக்கு அடுத்தபடியாக நடிப்பிற்கு முழு உருவம் கொடுத்தவர் கமல்ஹாசன். சினிமா சம்பந்தப்பட்ட அனைத்து தொழில்நுட்பங்களையும் கற்றுத் தேர்ந்தவர்.
புதிது புதிதாக உருவாகும் தொழில்நுட்பங்களை கையாண்டு அதை தமிழ் சினிமாவில் புகுத்த விரும்பும் ஒரு விஞ்ஞானியாக வலம் வருகிறார் கமல். சினிமா மீது ஆர்வம் அதிகமாக இருந்தாலும் அதே ஆர்வம் அரசியலிலும் கமலுக்கு அதிகமாகவே இருக்கின்றது.
அவருடைய அரசியல் பார்வை குறித்து நடிகர் ராதாரவி ஒரு பேட்டியில் கலாய்த்து தள்ளி இருக்கிறார். அதாவது ரஜினியை அரசியலுக்கு பொருத்தம் இல்லாதவர் என்றும் கமல் தலைவனாக இருக்க தகுதி இல்லாதவர் என்று கூறி இருக்கிறார்.
மேலும் கமலை ஒரு அதிமேதாவி என்றும் அவர் சந்திர மண்டலத்தையே தொட்டவர் என்றும் எல்லாம் தெரிந்தவர் போல பேசுவாரே தவிர ஒரு தலைவனாக இருக்க கொஞ்சம் கூட தகுதி இல்லாதவர் என்று கூறி இருக்கிறார்.
ஏனெனில் சரத்குமார் நடிகர் சங்கத் தலைவராக இருக்கும்போது ராதாரவி செயலாளராக இருந்திருக்கிறார். அந்த சமயத்தில் கணக்கு வழக்கு சரியில்லை என்றால் வேற தலைவனை மாற்றுவோம் என கமல் கூறினாராம். அந்த சமயத்தில் தான் விஷாலின் பக்கம் துணை நின்று இருக்கிறார் கமல்.
ஆனால் இப்போது விஷால் கூட்டணியில் உருவாகி இருக்கும் நடிகர் சங்கத்திலும் கணக்கு வழக்கு சரியில்லை என்று கூறுகிறார்கள். அதே கமல் கொஞ்சம் யோசித்துப் பார்க்க வேண்டும் என கூறுகிறார். இப்படி இருக்கும் கமல் எப்படி ஒரு நல்ல தலைவனாக இருக்க முடியும் என்று கேள்வி எழுப்பி இருக்கிறார் ராதாரவி.
இதையும் படிங்க : பாரதிராஜா பாலச்சந்தரால் சினிமாவிற்குள் வந்த இயக்குனர்… முதல் படமே மாஸ் ஹிட்.. இவ்வளவு நாளா தெரியவே இல்லையே?