Connect with us

Cinema News

தமிழ் சினிமாவில் கதாநாயகிகள் தற்கொலைக்கு யார் காரணம் தெரியுமா? – சர்ச்சையை கிளப்பிய பத்திரிக்கையாளர்..!

அனைத்து துறைகளிலும் இருப்பது போலவே சினிமா துறையிலும் கூட பிரபலங்கள் அதிகமான மன அழுத்தத்தை சந்திக்கின்றனர். முன்பெல்லாம் தமிழ் சினிமாவில் கிசுகிசுக்கள் அதிகமாக இருந்த காலக்கட்டமாக இருந்தது. இதனால் நடிகைகள் பலரும் தங்களை குறித்து என்ன கிசு கிசுக்கள் வருமோ என பயத்தில் இருப்பார்கள்.

தமிழ் சினிமாவில் நடிகைகள் சிலர் தற்கொலை செய்துக்கொண்டுள்ளனர். சிம்ரனின் தங்கை மோனல், நடிகை ஷோபா போன்ற சிலர் தற்கொலை செய்துக்கொண்டுள்ளனர். இவர்களின் தற்கொலைக்கு வெவ்வேறு காரணங்கள் கூறப்படுகிறது.

உதாரணமாக சிம்ரனின் தங்கை மோனல் பார்வை ஒன்றே போதுமே என்கிற திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் மிக பிரபலமானவர். இவர் சினிமாவில் டான்ஸ் மாஸ்டர் ஒருவரை காதலித்ததாக கூறப்படுகிறது. ஆனால் நாளடைவில் அந்த காதல் தோல்வியடையவே மோனல் தற்கொலை செய்துக்கொண்டார் என கூறப்படுகிறது.

பத்திரிக்கையாளர் கருத்து:

இதுக்குறித்து பிரபல சினிமா பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு கூறும்போது, அதிகப்படியான மன அழுத்தம்தான் கதாநாயகிகளை தற்கொலைக்கு தூண்டுகிறது. சினிமாவை பொறுத்தவரை கதாநாயகிகள்தான் அதிக மன அழுத்தத்திற்கு உள்ளாகின்றனர்.

கதாநாயகிகளை பொறுத்தவரை தன்னுடைய படத்தில் யார் கதாநாயகியாக நடிக்க வேண்டும் என்பதை கதாநாயகர்களே முடிவு செய்கின்றனர். இதனால் அந்த கதாநாயகர்களுக்கு பிடித்தமான கதாநாயகிகள் மட்டுமே அவர்களோடு தொடர்ந்து நடிக்க முடிகிறது.

இந்த விஷயங்கள் எல்லாம் பெரும்பாலும் அவர்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்திவிடுகிறது. எனவேதான் கதாநாயகிகள் அதிகமாக தற்கொலை செய்துக்கொள்கின்றனர். என செய்யாறு பாலு கூறியுள்ளார்.

இதையும் படிங்க: அஜித் லவ் பண்றது தெரியாமல் அட்வைஸ் சொன்ன ரமேஷ் கண்ணா!.. இவ்வளவு அப்பாவியா இருக்காரே!…

Continue Reading

More in Cinema News

To Top