
Cinema News
மலைப்பிரதேசத்தில் கடும் குளிரிலும் 5 மணிக்கு ஷூட்டிங்கிற்கு வந்த சில்க் ஸ்மிதா!… என்ன ஒரு டெடிகேஷன்!
Published on
1980களில் தென்னிந்திய சினிமா உலகில் கவர்ச்சி புயலாக வலம் வந்தவர் சில்க் ஸ்மிதா. இவர் அக்காலகட்ட இளைஞர்களின் கனவுக்கன்னியாக உலா வந்தார். எங்கு திரும்பினாலும் சில்க் ஸ்மிதாவுக்கு என்று ஒரு தனி ரசிகர் கூட்டம் இருந்தது. இப்போதும் சில்க் ஸ்மிதாவை ரசிப்பவர்கள் பலர் உண்டு. அவரின் புகழ் தமிழ் சினிமா உள்ளவரை நிலைத்து நிற்கும். அந்தளவுக்கு தமிழ் மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கிறார் சில்க் ஸ்மிதா.
சில்க் ஸ்மிதாவின் காந்த கண்கள் பலரையும் மயக்கும் வல்லமை கொண்டவை. ஆண்கள் மட்டுமல்லாது பெண்களையும் கவரக்கூடிய அழகு பதுமையாக திகழ்ந்து வந்தவர். இவ்வாறு தமிழ் சினிமாவில் கவர்ச்சி புயலாக கோலோச்சிய சில்க் ஸ்மிதா, 1996 ஆம் ஆண்டு தற்கொலை செய்துகொண்டார். தென்னிந்திய சினிமாவின் முக்கிய நடிகையாக திகழ்ந்த சில்க் ஸ்மிதா தனது வீட்டில் தூக்கில் தொங்கிய செய்தி பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
Silk Smitha
இந்த நிலையில் சில்க் ஸ்மிதாவை குறித்து ஒரு சுவாரஸ்யமான தகவலை சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட தயாரிப்பாளர் கஃபார் பகிர்ந்துகொண்டுள்ளார்.
1984 ஆம் ஆண்டு பாலு மகேந்திரா இயக்கத்தில் தியாகராஜன், பானு சந்தர், சில்க் ஸ்மிதா, அர்ச்சனா ஆகியோரின் நடிப்பில் வெளியான திரைப்படம் “நீங்கள் கேட்டவை”. பாலு மகேந்திரா அதுவரை தான் இயக்கி வந்த கலைப்படைப்பு பாணியிலான திரைப்படங்களில் இருந்து மாறி ஒரு கம்மெர்சியல் திரைப்படமாக இத்திரைப்படத்தை உருவாக்கியிருந்தார்.
Silk Smitha
இளையராஜா இசையில், இத்திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் பட்டித்தொட்டி எங்கும் ஹிட் அடித்தது. “அடியே மனம் நில்லுனா நிக்காதடி”, “பிள்ளை நிலா”, “ஓ வசந்த ராஜா”, “கனவு காணும்” ஆகிய பாடல்கள் இப்போதும் ரசிக்கத்தக்க பாடல்களாக அமைந்துள்ளது.
இத்திரைப்படத்தின் சில காட்சிகள் கர்நாடகாவின் நந்தி மலைப்பகுதிகளில் படமாக்கப்பட்டது. பாலு மகேந்திரா எப்போதும் காலை 5.30 மணிக்கே படப்பிடிப்பை தொடங்கிவிடுவாராம். ஆதலால் நடிகர்-நடிகைகளை காலை 5.30 மணிக்குள் ஆஜர் ஆகிவிடுமாறு கூறிவிடுவாராம். ஆனால் சில்க் பெங்களூரில் இருந்து வந்து காலை 5 மணிக்கெல்லாம் நந்தி மலை அடிவாரத்தில் காத்திருப்பாராம். அந்தளவுக்கு சினிமாவை நேசித்தவராக திகழ்ந்திருக்கிறார் சில்க் ஸ்மிதா.
இதையும் படிங்க: ‘மாமன்னன்’ படம் கண்டிப்பா ஓடாது! – பிரபல நடிகர் ஓப்பன் டாக்
Karur: தற்போது தமிழ் நாட்டு அரசியல் களமே பரபரப்பாக இருக்கின்றது.ஒட்டுமொத்த ஆளுங்கட்சி அமைச்சர்களும் கரூரை நோக்கி படையெடுத்திருக்கின்றனர். நேற்று கரூரில் நடந்த...
TVK Vijay: நேற்று ஒரு பெரிய துயர சம்பவம் தமிழ் நாட்டையே உலுக்கியது. தவெக தலைவர் தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணமாக ஒவ்வொரு...
ரங்கராஜ் முகத்திரை கிழிப்பு : மாதம்பட்டி ரங்கராஜ் சினிமா ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசல்டா என்பவரை ஆசை வார்தத்தை கூறி ஏமாற்றி...
தீயாய் வேலை செய்யும் விஜய் : விஜய் பேச்சில் ஏற்பட்ட தடுமாற்றம் : விஜயின் பேச்சு பல விமர்சனங்களை சந்தித்தாலும் இன்று...
சினிமா நடிகர் பிரபல காமெடி நடிகர் தாடி பாலாஜி மருத்துவமனையில் உயிருக்கு போராடும் நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மூத்த பத்திரிக்கையாளர் சேகுவேரா கூறி...