தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை தர்ஷனா ராஜேந்திரன்.
தர்ஷனா தனது சினிமா வாழ்க்கையை 2014 ஆம் ஆண்டு, மலையாளத் திரைப்படமான ஜான் பால் வாத்தில் துறக்குன்னு என்ற படத்தின் மூலம் துவங்கினார். பின்னர் ஆஷிக் அபு இயக்கிய மாயநதி, வைரஸ் (2019) படங்களில் நடித்துள்ளார். விஜய் சூப்பரும் பௌர்ணமியும், அஞ்சலி மேனன் இயக்கிய கூடே, வினீத் ஸ்ரீனிவாசன் இயக்கிய ஹிருதயம் (2022) ஆகியவை அவரது மற்ற முக்கிய படங்களாகும்.

ஹிருதயம் திரைப்படம் மலையாள சினிமா மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் தர்ஷனா ராஜேந்திரனுக்கு ரசிகர்களை பெற்றுத்தந்தது. ஒளிப்பதிவாளர் ராஜீவ் ரவி இயக்கிய துறைமுகம் படத்திலும் தர்ஷனா ராஜேந்திரன் நடித்திருந்தார். 2022 ஆம் ஆண்டு ஜெய ஜெய ஜெய ஜெய ஹே படத்திலும் நடித்து இருந்தார். இந்த படத்தில் தர்ஷனா ராஜேந்திரன் கதாபாத்திரம் பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
Also Read

கவண் (2017) (பாதிக்கப்பட்ட பெண்) மற்றும் இரும்புத்திரை (2018) (விஷாலின் தங்கையாக) போன்ற தமிழ் படங்களிலும் தர்ஷனா ராஜேந்திரன் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் 4 லட்சம் பாலோவர்களை கொண்ட 34 வயதான நடிகை தர்ஷனா ராஜேந்திரன், தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். மாடர்ன் உடையில் நவநாகரீக தோற்றத்தில் கிளாமர் லுக்கில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. ஹோம்லி லுக்கில் நடித்து புகழ்பெற்ற தர்ஷனா ராஜேந்திரனின் கிளாமர் லுக் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் அதிக கமெண்ட் களையும் பெற்று வருகிறது.



