Cinema History
ஒரே வசனத்தில் நடிகையை மிரள வைத்த இயக்குனர்.. கதையே கேட்காமல் கமிட் ஆன ரேவதி!..
தமிழ் சினிமாவிற்கு சிறுவயதிலேயே கதாநாயகியாக அறிமுகமான நடிகர் நடிகைகளில் ரேவதியும் ஒருவர். பள்ளி படித்துக் கொண்டிருந்த காலகட்டத்திலேயே இயக்குனர் பாரதிராஜா மூலமாக தமிழ் சினிமாவில் வாய்ப்பு கிடைத்ததால் மண்வாசனை திரைப்படம் மூலமாக சினிமாவிற்கு அறிமுகமானார் ரேவதி.
அவருடைய அழகான சின்ன முகத்தின் காரணமாக பல வருடங்களாக கதாநாயகியாக இருந்து வந்தார். பல முக்கிய நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். சுட்டியான பெண் கதாபாத்திரமாக இருந்தாலும் சரி, அடக்க ஒடுக்கமான பெண் கதாபாத்திரமாக இருந்தாலும் சரி எந்த ஒரு கதாபாத்திரத்தையும் சிறப்பாக நடிக்க கூடிய ஆற்றல் கொண்டவர் ரேவதி.
கை கொடுக்கும் கை திரைப்படத்தில் மிகவும் அமைதியான ஒரு கதாபாத்திரமாக ரேவதி நடித்திருப்பார். அதே சமயம் புன்னகை மன்னன் போன்ற திரைப்படங்களில் கொஞ்சம் சுட்டித்தனமான பெண்ணாக நடித்திருப்பார்.
சில வருடங்களுக்குப் பிறகு பட வாய்ப்புகளை இழந்த ரேவதி பிறகு சினிமாவை விட்டு விலகி இருந்தார். அதன் பிறகு தனுஷ் இயக்கிய பா பாண்டி என்கிற திரைப்படத்தில் அவரை நடிக்க வைக்கலாம் என தனுஷ் நினைத்தார். எனவே அவருக்கு போன் செய்த தனுஷ் பா பாண்டி என்று ஒரு திரைப்படத்தை இயக்க இருக்கிறேன் அதில் உங்களுக்கு கதாநாயகி கதாபாத்திரமே இருக்கிறது நடிக்கிறீர்களா? எனக் கூறியுள்ளார்.
ரேவதிக்கு வந்த வாய்ப்பு:
அப்போது படத்தின் கதையை கூறுவதற்கு தனுஷிற்கு நேரமில்லை என்பதால் படத்தில் ரேவதியின் முதல் வசனம் குறித்து கூறியுள்ளார். பா பாண்டி படத்தில் ரேவதிக்கு முதல் வசனமாக வருவது ராஜ்கிரண் ரேவதியை பார்த்தவுடன் இத்தனை வயது ஆகியும் உனக்கு இன்னும் முடி நரைக்கவில்லையே என கேட்பார். அதற்கு ரேவதி என் டை இருப்பதெல்லாம் உனக்கு தெரியாதா என கேட்பார்.
இந்த வசனத்தை தனுஷ் அப்படியே கூறியவுடன் அது ரேவதிக்கு மிகவும் பிடித்து விட்டது படத்தின் கதையவே கேட்காமல் அந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார் ரேவதி. அதே போக ரேவதிக்கு ஒரு முக்கியமான கம் பேக் படமாக பா பாண்டி அமைந்தது.
இதையும் படிங்க: பிரபு செய்த செயலால் மசாலா படத்தை இயக்க கிளம்பிய பாலு மகேந்திரா… இப்படி எல்லாம் நடந்திருக்கா?