Connect with us

Cinema News

தமிழில் அப்போதே வந்த காந்தாரா… ஆனால் மக்கள் கண்டுக்கல.. என்ன படம் தெரியுமா?

பொதுமக்களுக்கு எப்போதுமே குலதெய்வ வழிபாட்டின் மீது ஒரு பெரும் மதிப்பு உண்டு. குலதெய்வ வழிபாடு என்பது சாதாரண மக்களின் வாழ்க்கை முறையிலேயே இருப்பதால் அது திரைப்படங்களில் வரும்பொழுது மக்கள் மத்தியில் மிகவும் பிரபலம் ஆகி விடுகிறது.

இயக்குனர் ரிஷப் ஷெட்டி இயக்கி, நடித்து வெளியான காந்தாரா திரைப்படமே அதற்கு ஒரு பெரிய உதாரணமாகும். காந்தாரா திரைப்படம் மிகவும் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட ஒரு திரைப்படமாகும். கன்னட பகுதியில் உள்ள ஒரு குலதெய்வத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம்தான் காந்தாரா.

பழங்குடியின மக்கள் வாழ்க்கையில் குலதெய்வம் எப்படி உள்ளது, அநீதிகளுக்கு எதிராக மக்களை காக்க அந்த நாட்டார் தெய்வம் எப்படி வருகிறது, என்பதாக அந்த படத்தில் கதை செல்கிறது.

பொதுவாக இந்தியா முழுவதுமே குலதெய்வ வழிபாடு முறை இருப்பதால் இந்த படமும் இந்தியா முழுவதுமே நல்ல பிரபலம் அடைந்தது. எதிர்பார்த்ததை விடவும் அதிகமான வசூலை பெற்று கொடுத்தது. முதலில் இந்த படம் கன்னடத்தில் மட்டுமே வெளியானது அதன் பிறகு படத்தின் வரவேற்பை பார்த்து மற்ற மொழிகளிலும் அதை டப்பிங் செய்து ரிலீஸ் செய்தனர்.

தமிழில் வந்த காந்தாரா:

ஆனால் தமிழிலும் கூட இப்படியான குலதெய்வ வழிபாட்டை முன்னிறுத்தி திரைப்படங்கள் வந்துள்ளன என தனது பேட்டியில் கூறுகிறார் பிரபல சினிமா பத்திரிகையாளர் செய்யாறு பாலு. தமிழில் விடாது கருப்பு என்று வந்த நாடகத் தொடர் பலருக்கும் தெரிந்திருக்கும். ஆனால் 1992 ஆம் ஆண்டு சின்னத்தாயி என்கிற ஒரு திரைப்படம் வெளியாகி உள்ளது.

சின்னத்தாயி திரைப்படம் நடிகர் விக்னேஷிற்கு முதல் திரைப்படம். இந்த திரைப்படத்தில் நெப்போலியன், வினுச்சக்கரவர்த்தி, விசித்ரா,ராதாரவி போன்ற நடிகர்கள் நடித்திருந்தனர். அப்பொழுதே நாட்டார் தெய்வம் குறித்து சிலிர்க்க வைக்கும் ஒரு திரைப்படமாக இந்த சின்னத்தாயி திரைப்படம் வெளியாகி இருந்தது.

ஆனால் அப்பொழுது சமூக வலைத்தளம் போன்ற விஷயங்கள் இல்லாத காரணத்தினால் இந்த திரைப்படம் பெரிதாக பேசப்படாத படமாகவே போய்விட்டது என கூறுகிறார், செய்யார் பாலு.

author avatar
Rajkumar
Continue Reading

More in Cinema News

To Top