Connect with us
mgr

Cinema History

முந்தானையில் ஆட்டோகிராப் கேட்ட பெண் – எம்ஜிஆர் கொடுத்த அசத்தலான பதில்

தமிழ் சினிமாவில் இருந்து ஒரு நல்ல தலைவரை ஒரு நல்ல நடிகரை ரசிகர்கள் இழந்திருக்கிறார்கள் என்றால் அதில் முக்கியமானவராக கருதப்படுபவர் நடிகரும் புரட்சித் தலைவருமான எம்ஜிஆர். எத்தனையோ பல நல்ல செயல்களை செய்து விட்டு சென்ற எம்.ஜி.ஆரின் புகழும் பெருமையும் இன்றளவும் பேசப்பட்டு வருகின்றன.

என்ன ஒரு அறப்பணி என்ன ஒரு நல்ல குணம் அவரைப்பற்றி திரும்பத் திரும்ப படிக்கும் போதும் இந்த ஒரு தலைவர் இருந்த காலத்தில் நாம் இல்லையே என்று வருத்தப்படும் அளவிற்கு நல்ல குணம் படைத்தவராக வாழ்ந்து விட்டு சென்றிருக்கிறார் எம்ஜிஆர். அவரைப் பற்றி பேசாத நாள் என்ற ஒன்று இல்லை. அந்த அளவுக்கு தினமும் செய்தித்தாள்களிலும் சரி சமூக வலைதளங்களிலும் சரி எம்ஜிஆரின் பெயர் தான் அலையாக வீசிக்கொண்டு இருக்கின்றன.

mgr1

mgr1

தான் நடித்த ஒவ்வொரு படங்களின் மூலம் பல நல்ல கருத்துக்களை விதைத்தவர் எம்ஜிஆர். அவருடைய கொள்கைகள் ஏழேழு ஜென்மங்கள் கடந்தாலும் அது தமிழ்நாடு முழுவதும் வீசிக்கொண்டே தான் இருக்கும். அப்படிப்பட்ட ஒரு உன்னதமான நடிகர் எம்.ஜி.ஆர். இந்த ஒரு காரணத்தினாலேயே தான் அரசியலிலும் அவரால் நிலைத்து நிற்க முடிந்தது.

இந்த நிலையில் எம்ஜிஆரின் ஒரு யாருக்கும் தெரியாத ஒரு விஷயம் இணையத்தில் வைரலாகி வருகின்றது. 60கள் காலத்தில் தமிழகத்தின் ஆளுநராக இருந்தவர் மைசூரைச் சேர்ந்த ஜெயசாம ராஜா உடையார் என்னும் ஒரு மகாராஜா. எம்ஜிஆர் ஒரு சமயம் படப்பிடிப்பிற்காக மைசூர் சென்ற போது அந்த மகாராஜாவின் மகளான கல்யாணி என்பவர் தன் தோழிகளுடன் எம்ஜிஆரை பார்க்க விரும்பி இருக்கிறார்.

mgr2

jaysamaraja woodyar

அப்போது கல்யாணி தன் தந்தையின் உதவியாளராக இருந்த மகாலிங்கம் என்பவரிடம் தன் விருப்பத்தை சொல்லி இருக்கிறார் .மகாலிங்கமும் அதை எம்ஜிஆர் இடம் தெரிவித்திருக்கிறார் .எம்ஜிஆர் அவர்களை வர சொல்லி இருக்கிறார். கல்யாணி தன் தோழிகளுடன் எம்ஜிஆரை பார்த்து அவருடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டார்கள். அப்போது அந்த தோழிகளில் ஒருவர் தன் முந்தானையை விரித்து காட்டி எம்ஜிஆர் இடம் ஆட்டோகிராப் வாங்க வந்திருக்கிறார்.

இதையும் படிங்க : இளையராஜாவின் முதல் படம் ‘அன்னக்கிளி’ சந்தித்த பிரச்சனை!.. அது மட்டும் நடக்கலனா!..

அப்போது எம்ஜிஆர் அந்தப் பெண்ணிடம் இந்த முந்தானை உன் கணவருக்கு மட்டுமே உரித்தான ஒன்று. அதனால் நான் இதில் போட மாட்டேன் என்று சொல்லிவிட்டு தன் டைரியில் இருந்த ஒரு காகிதத்தை கிழித்து அதில் தன்னுடைய ஆட்டோகிராபை போட்டு அந்த பெண்ணிடம் கொடுத்துவிட்டு சென்றாராம் எம்ஜிஆர். இந்த செய்தி தான் இப்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

google news
Continue Reading

More in Cinema History

To Top