சரத்பாபுவுக்கு என்ன பிரச்சனைன்னு கண்டுபிடிக்கவே முடியல-பகீர் கிளப்பும் சுஹாசினி…

Published on: May 23, 2023
Sarath Babu and Suhasini
---Advertisement---

தென்னிந்தியாவின் பிரபல நடிகராக திகழ்ந்த சரத்பாபு, கடந்த சில காலமாகவே செப்சிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். ஆனால் சில நாட்களுக்கு முன் அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போக, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். கடந்த 3 ஆம் தேதி சரத்பாபு உயிரிழந்துவிட்டதாக செய்திகள் பரவியது. பின்னர் அது வதந்தி என தெரிய வந்தது. இந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி சரத்பாபு உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வ செய்திகள் வெளிவந்தன.

Sarath Babu
Sarath Babu

இதனை தொடர்ந்து அவருக்கு திரைத்துறையை சேர்ந்த பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் நடிகை சுஹாசினி இன்று காலை சரத்பாபுவின் வீட்டிற்கு சென்று அஞ்சலி செலுத்த சென்றிருந்தார். அப்போது அவர் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அதில், “கடந்த 92 நாட்களாக சரத்பாபு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். முதலில் இரண்டு மாதங்கள் பெங்களூரில் இருந்தார். அவரின் சொந்தக்காரர்கள் எல்லாம் பெங்களூரில் இருந்ததால் ஒரு சிறு காய்ச்சல் காரணமாக பெங்களூருக்கு போனார். அங்கே போனபோது அவருக்கு என்ன பிரச்சனை என கண்டுபிடிக்கவே முடியவில்லை.

Suhasini
Suhasini

இரண்டு மாதங்களுக்கு பிறகுதான் சரத்பாபுவிற்கு மல்டிபிள் மயலோமா என்ற பிரச்சனை இருப்பது தெரியவந்தது. அதன் பின் ஹைதராபாத்தில் அவரது அண்ணன், தங்கைகள் இருந்ததால் அங்குள்ள மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கே நானும் சிரஞ்சீவியும் சென்று பேசினோம். அங்கிருந்த மருத்துவர்கள் எங்களால் முடிந்தளவு அவரை காப்பாற்றுவோம் என கூறினார்கள். ஆனாலும் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துவிட்டார்” என கூறியுள்ளார்.

சரத்பாபு, ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவராக இருந்தாலும் தமிழ் சினிமா ரசிகர்களிடம் மிக பிரபலமான நடிகராக திகழ்ந்தார். குறிப்பாக தமிழில் ரஜினிகாந்துடன் இணைந்து அவர் நடித்த “முள்ளும் மலரும்”, “அண்ணாமலை”, “முத்து” ஆகிய திரைப்படங்களில் மிக சிறப்பாக நடித்திருந்தார். இவரின் மறைவுக்கு தென்னிந்திய சினிமா துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: பட வாய்ப்புக்காக தூக்கில் தொங்கிய எம்.ஜி.ஆர்!.. இப்படி எல்லாம் கஷ்டப்பட்டாரா?!…

 

Arun Prasad

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.