Cinema News
அண்ணாமலை படத்தில் அந்த சீனே இல்ல ; சரத்பாபு ஐடியாதான் அது: இயக்குனர் சொன்ன ரகசியம்
தமிழ் திரையுலகம் தொடர்ந்து பல இழப்புகளை சந்தித்து வருகின்றது. விவேக், மயில்சாமி, மனோபாலா என தொடர்ந்து பல நல்ல உள்ளங்களை இழந்து வாடிய தமிழ் சினிமா இன்றும் மீண்டும் ஒரு துயரத்தில் ஆழ்ந்திருக்கின்றது. அனைவருக்கும் பிடித்த நடிகரான சரத்பாபுவின் மரணம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. ஒரு சிறந்த குணச்சித்திர நடிகராக வலம் வந்தார் சரத்பாபு.
எந்த ஒரு கதாபாத்திரத்திற்கும் மிகவும் பொருத்தமான நடிகராக இருந்தவர். அதிலும் சரத்பாபுவிற்கும் ரஜினிக்கும் இடையே ஒரு நல்ல ராப்போ இருந்து வந்தது. நல்ல நண்பர்களாக இருந்தனர். அந்த நட்பு அண்ணாமலை படத்தில் காட்சியாக பார்க்கும் போது இன்னும் அற்புதமாக இருந்தது. அந்தப் படத்தில் சரத்பாபுவின் நடிப்பு, அவர் அந்தப் படத்திற்காக எப்படி தயார் படுத்திக் கொண்டார் என்பதை அந்தப் படத்தின் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா ஒரு பேட்டியில் கூறினார்.
சிறுவயதில் இருந்தே நண்பர்களாக இருக்கும் அண்ணாமலை மற்றும் அசோக் ஆகிய இருவருக்குமிடையே ஒரு சிறு விரிசல் ஏற்படுகிறது. அண்ணாமலையின் வீட்டை அசோக் சொல்லித்தான் இடிக்க வேண்டும். ஆனால் இதை பற்றி ஒரு பெரிய விவாதமே ஏற்பட்டதாம். அந்த நேரத்தில் சரத்பாபு இயக்குனரிடம் ‘அதெப்படி சார், அசோக் அண்ணாமலையின் வீட்டை இடிக்க சொல்ல முடியும்? சரிவராது’ என சொன்னாராம்.
அதன் பிறகு சரத்பாபு யோசித்து ‘அசோக் நல்லா குடிக்கிறான், போதையில் இருக்கும் நேரத்தில் அண்ணாமலையின் வீட்டை இடித்துவிடலாமா என கேட்க அசோக் தலையை அசைக்கிறான்’ என இப்படி வேண்டுமென்றால் வைத்துக் கொள்வோம் என்று கூறினாராம். இதை குறிப்பிட்டு சொன்ன சுரேஷ் கிருஷ்ணா சரத்பாபுவின் ஐடியாதான் இது. ஏனெனில் அசோக் என்ற கதாபாத்திரம் வில்லன் கிடையாது. அப்படி இருக்கும் போது சாத்தியப்படாது என நினைத்து சரத்பாபு இந்த குடிக்கிற சீன் உள்ள ஐடியாவை சொன்னார் என கூறினார்.