Connect with us
msv

Cinema News

16 ட்யூன் போட்டும் திருப்தியடையாத தயாரிப்பாளர் – ஹார்மோனியமே வேண்டாம்!.. கடுப்பான எம்.எஸ்.வி

தற்போது உள்ள இசை அமைப்பாளர்களுக்கு எல்லாம் முன்னோடியாக இருந்தவர் பழம்பெரும் இசையமைப்பாளரான எம்.எஸ்.விஸ்வநாதன். எம்.எஸ்.வி இசையில் இனிமையான பல பாடல்கள் நம் செவியை அலங்கரித்து இருக்கின்றன. அவரின் உறவினர் ஒருவரின் மூலமாக மிகவும் எளிதாக சினிமாவிற்குள் நுழைந்தார் எம்.எஸ்.வி.

அவர் இசை அமைக்கும் வேகம் அனைத்து தயாரிப்பாளர்களையும் அவர் பக்கம் திரும்ப வைத்தது. இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் விரும்பும் மெட்டுக்களை தன்னுடைய ஹார்மோனிய பெட்டியை வைத்து அவர்களின் விருப்பங்களை நிறைவேற்றிக் கொடுப்பதே தன் தலையாயக் கடமையாக கொண்டிருந்தார் எம்.எஸ்.வி.

msv1

msv1

இப்படித்தான் ஒரு சம்பவம் ஏவிஎம் குமாரர்களில் ஒருவரான ஏவி.எம் குமரன் ஒரு அனுபவத்தை தன் பேட்டியின் மூலம் பகிர்ந்து இருக்கிறார். எம்ஜிஆர், சரோஜாதேவி இணைந்து நடித்த ராஜாவின் பார்வை என்ற பாடல் காட்சிக்காக மெட்டை போடச் சொல்லுவதற்கு எம்.எஸ்.வியை அழைத்தாராம் குமரன். கிட்டத்தட்ட 16 டியூன்கள் போட்டும் குமரன் ஒன்றுமே சொல்லாமல் தலையை குனிந்து கொண்டே இருந்தாராம்.

அதைப் புரிந்து கொண்ட எம்.எஸ்.வி “இது என்னையா ஒண்ணுமே உனக்கு பிடிக்க மாட்டேங்குது” என்று நினைத்து “எனக்கு இந்த ஹார்மோனிய வேண்டாம். பியானோ ஏற்பாடு செய்து கொடு. அதில் வேண்டுமென்றால் மெட்டை போட்டு காட்டுகிறேன்” என்று கூறினாராம். உடனே அருகில் இருந்த ஆர் ஆர் தியேட்டரில் பியானோ இருந்ததாம் .அங்கு அழைத்துக் கொண்டு போய் எம்.எஸ்.வி ஐ டியூன் போட சொல்லி இருக்கிறார்.

msv2

msv2

அதிலிருந்து வந்த பாடல் தான் ராஜாவின் பார்வை பாடல் ட்யூன். ட்யூனை போட்டதும் எம்எஸ்வி உடனே “வாலியையும் வரச் சொல்லு. சேர்த்து பாடலையும் ரெக்கார்டிங் பண்ணிவிடலாம் “என்று சொன்னாராம். இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் பொழுதே வாலி ஸ்பாட்டுக்கு வந்திருக்கிறார். இந்த டியூனை கேட்டதும் சடசடவென்று வாலி ராஜாவின் பார்வை, ராணியின் பக்கம் என்ற வரிகளை கொடுக்க உடனே பாடல் ரெக்கார்டிங் முடிந்து விட்டதாம்.

இதையும் படிங்க : சான்ஸ் கேட்டு வந்த நடிகரை அவமானப்படுத்திய உதவியாளர் – கேப்டன் தெரிஞ்சு சும்மா இருப்பாரா?

Continue Reading

More in Cinema News

To Top