சரத்பாபு முன்னாள் மனைவிக்கு மாதா மாதம் பணம் அனுப்பிய நடிகர் – யாருன்னு தெரிஞ்சா ஆச்சர்யப்படுவீங்க!..

Published on: May 25, 2023
sarath babu
---Advertisement---

தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானவர் சரத்பாபு. 70வது வயதில் உடல் நலம் பாதிக்கப்பட்டு சமீபத்தில் மரணமடைந்துள்ளார். ரஜினியுடன் முள்ளும் மலரும், வேலைக்காரன், அண்ணாமலை, முத்து ஆகிய படங்களில் நடித்துள்ளார். பாலச்சந்தரால் சினிமாவில் அறிமுகமானார். மென்மையாக பேசி நடிக்கும் நடிகர் இவர். ஆக்ரோஷமான சண்டை காட்சிகளெல்லாம் இவர் நடிக்கமாட்டார். பணக்கார ஜென்டில்மேன் வேடங்களுக்கு மிகவும் பொருத்தமான நடிகர் இவர். தமிழ் சினிமா மட்டுமில்லாமல் பல தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.

sarath

சரத்பாபு தன்னை விட 5 வயது மூத்தவரன ரமாபிரபா என்கிற நடிகையை திருமணம் செய்து கொண்டார். ரமாபிரபா தெலுங்கில் காமெடி வேடத்தில் பல படங்களில் நடித்துள்ளார். தமிழிலும் காமெடி நடிகை, குணச்சித்திரம், வில்லி என கலக்கியுள்ளார். தான் சம்பாதித்த எல்லா பணத்தையும் வைத்து சரத்பாபுவை ஹீரோவாக போட்டு இவர் எடுத்த ஒரு தெலுங்கு படம் படுதோல்வி அடைந்தது. அதன்பின் அவரையே சரத்பாபு திருமணமும் செய்து கொண்டார். ஆனால், 14 வருடங்களுக்கு பின் இருவருக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டு பிரிந்துவிட்டனர்.

sarath1
sarath1

அதன்பின் அந்திராவில் ஒரு கிராமத்தில் ஒரு சிறிய வீட்டில் ரமாபிரபா வசித்து வருகிறார். அப்போது அவருக்கு மாத மாதம் ஒரு தொகை மணி ஆர்டரில் வருமாம். அதில் ஹைதராபாத் என்று மட்டும் குறிப்பிட்டிருந்ததால் யார் அனுப்பியது என்பது அவருக்கு தெரியவே இல்லை. அதன்பின் சிலர் மூலம் அதுபற்றிய தகவலை தேடியபோது அவருக்கு பணம் அனுப்பியது தெலுங்கு நடிகர் நாகார்ஜூனா என்பது தெரியவந்துள்ளது.

நாகார்ஜுனாவின் அப்பா நாகேஸ்வர ராவ் ரமாபிரபாவிடம் அண்ணன் போல பழகியவர். அவர் நடிக்கும் பல படங்களில் சின்ன சின்ன வேடங்கள் அவர் ரமாபிரபாவுக்கு வாங்கி கொடுப்பவர். அவர் மீது பாசம் கொண்டவர். ரமாபிரபா கணவரை பிரிந்து வாழும் காலத்தில் அவருக்கு உதவும்படி மகன் நாகார்ஜுனாவிடம் சொல்லியதால்தான் அவர் தொடர்ந்து அவருக்கு பணம் அனுப்பிவந்துள்ளது தெரியவந்தது. இதைக்கேட்டு ரமாபிரபா கதறி அழுதாராம்.

இந்த தகவலை பல வருடங்களாக சினிமா பத்திரிக்கையாளராக இருக்கும் செய்யாறு பாலு ஊடகம் ஒன்றில் தெரிவித்துள்ளார்.

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.