Connect with us
Leo

Cinema News

இரு வேடங்களில் விஜய் , அர்ஜூன்? வெறித்தனமான ஒரு ஃபைட்!… லியோ படம் குறித்து வெளியான மாஸ் தகவல்

விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் “லியோ” திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு காஷ்மீர் பகுதியில் நடைபெற்று வந்தது. அதனை தொடர்ந்து தற்போது இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. அடுத்த கட்டப் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளிவருகின்றன.

Leo

Leo

விஜய் இத்திரைப்படத்தில் சால்ட் அன்டு பெப்பர் லுக்கில் இருக்கிறார் என்பதை நாம் பார்த்திருப்போம். இத்திரைப்படத்தில் ஓரளவு வயதான கதாப்பாத்திரத்திலேயே விஜய் நடிக்கிறார் என கூறப்படுகிறது. இத்திரைப்படத்தில் கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், மன்சூர் அலிகான், அர்ஜூன், பிரியா ஆனந்த், சஞ்சய் தத் போன்ற பலரும் நடித்து வருகின்றனர்.

விஜய் ஒரு கேங்கஸ்டராக நடிக்கிறாராம். அதே போல் அர்ஜூனும் ஒரு கேங்கஸ்டராக நடிக்கிறார் என்று கூறப்படுகிறது. அர்ஜூன் கதாப்பாத்திரம் ஒரு வில்லன் கதாப்பாத்திரம் என்றே கூறப்படுகிறது. இந்த நிலையில் தற்போது “லியோ” திரைப்படம் குறித்து ஒரு சூடான தகவல் வெளிவந்துள்ளது.

Leo

Leo

அதாவது தற்போது விஜய், அர்ஜூன் ஆகியோருக்கு இடையே ஒரு பயங்கரமான சண்டை காட்சி படமாக்கப்பட்டு வருகிறதாம். இதில் விஜய் அர்ஜூன் ஆகியோர் இளம் வயதுக்கான கெட்டப்பில் இருக்கிறார்களாம். அதாவது இதில் விஜய், அர்ஜூன் ஆகியோர் இளம் வயது கெட்டப், மற்றும் கொஞ்சம் வயதான கெட்டப்ன் ஆகிய இரண்டு கெட்டப்களில் நடிப்பதாக இதில் இருந்து தெரியவருகிறது.

“லியோ” திரைப்படம் வருகிற அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி வெளிவரவுள்ளது. இன்னும் ஐந்தே மாதங்கள்தான் இருக்கும் நிலையில் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விஜய் “லியோ” திரைப்படத்தை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் தனது 68 ஆவது திரைப்படத்தில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: விஜயகாந்தை வேண்டாம் என ஒதுக்கிய ஏவிஎம் நிறுவனம்! – பதிலுக்கு இயக்குனர் என்ன செய்தார் தெரியுமா?

author avatar
Arun Prasad
Continue Reading

More in Cinema News

To Top