Cinema History
சிவாஜி மாதிரி கூட இமிடேட் பண்ணிரலாம்! ஆனா இவர மாதிரி முடியவே முடியாது – யாருனு தெரியுமா?
தமிழ் சினிமாவில் சிவாஜி ஒரு இலட்சிய நடிகராக திகழ்ந்து வந்தார். நாடக மேடையில் இருந்து வெள்ளி திரையில் கலக்கிய ஒரு கலைஞர்தான் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். நடிப்பு பல்கலைக்கழகமாகவே திகழ்ந்து வந்தார். அவருடைய நடிப்பை பார்த்தும் அவருடைய படங்களை பார்த்தும் இன்று சினிமாவிற்கு வரும் இளைஞர்கள் ஏராளம்.
அவருடைய நடிப்பிற்கு இணை அவர் மட்டுமே என்று பல பேர் சொல்லி நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். புராண கதைகள், வரலாற்று கதைகள் என எந்த ஒரு கதாபாத்திரமாகட்டும் அதை தத்துரூபமாக தன் நடிப்பின் மூலம் வெளிப்படுத்துபவர் சிவாஜி கணேசன்.
இந்த நிலையில் சிவாஜி நடித்த பாகப்பிரிவினை திரைப்படம் 1959 ஆம் ஆண்டு வெளிவந்தது. அந்தப் படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்து எடுத்தார்கள். பாகப்பிரிவினை படத்தில் சிவாஜி கை ஊனமாக இருக்கும் கதாபாத்திரமாக நடித்திருப்பார். அதை ஹிந்தியில் திலீப் குமாரை வைத்து எடுக்க முடிவெடுத்தார்கள். ஆனால் திலிக்குமார் ஊனமாக நான் நடிக்க மாட்டேன் என்று கூறி மறுத்துவிட்டார். அதன் பிறகு சுனில் தத் என்ற நடிகரை சிவாஜியின் கதாபாத்திரத்தில் நடிக்க வைத்தார்கள்.
எம்.ஆர்.ராதாவின் கதாபாத்திரத்தில் யாரை நடிக்க வைக்கலாம் என பாலிவுட்டில் யோசித்தார்கள். ஆனால் யாருமே அவர்கள் மனதில் நிற்கவில்லை. அதன் பிறகு பிரான் என்ற நடிகரை நடிக்க வைத்தார்கள். ஆனால் எம்.ஆர்.ராதா அளவிற்கு அந்த படத்தில் அவர் நடிப்பில் பிரதிபலிக்கவில்லை. மேலும் நடிகர் பிரான் எம்.ஆர்.ராதாவின் நடிப்பை பாகப்பிரிவினை படத்தில் பார்த்துவிட்டு இதை என்னால் செய்ய இயலாது. ஏதோ நடிக்கிறேன் என்று ஹிந்தியில் நடித்து கொடுத்தாராம்.
மேலும் எம்ஆர்ராதாவின் நடிப்பில் வெளிவந்த சித்தி என்ற திரைப்படத்தை பார்த்தும் பிரான் இந்த மாதிரி என்னால் நடிக்க முடியாது என கூறினாராம். அது மட்டுமில்லாமல் வட இந்திய நடிகர்களான சமீ கபூர் ,சஞ்சய் குமார் போன்ற நடிகர்கள் ஒரு பிலிம் பேர் விழாவில் சிவாஜியை போல் ஒரு நடிகர் இல்லை என்று ஒரு சமயம் கூறி இருக்கிறார்கள். ஆனால் அந்த நடிகர்களே “யாரை வேண்டுமென்றாலும் இமிடேட் பண்ணிவிடலாம். ஆனால் எம்.ஆர்.ராதாவை போல் யாரும் இமிடேட் செய்ய முடியாது” என்று வியந்து பாராட்டினார்களாம்.
சினிமாவில் மூன்று குரல்களில் பேசக்கூடிய ஒரு ஒப்பற்ற நடிகராக வலம் வந்திருக்கிறார் எம் .ஆர். ராதா. மேலும் வில்லன் கதாபாத்திரத்தை நகைச்சுவையாகவும் பண்ண முடியும் என்பதற்கு ஒரு உதாரணமாகவும் இருந்து வந்திருக்கிறார் எம் ஆர் ராதா என்று இந்த ஒரு சுவாரஸ்ய தகவலை பிரபல அரசியல் விமர்சகர் காந்தராஜ் கூறினார்.
இதையும் படிங்க : சினிமாவிற்கு குட்பையா? திடீரென வைரலாகும் விஜய் குறித்த செய்திகள்