Cinema History
7 லட்சம் கொடு! படத்தை முடிச்சு தரேன் – தயாரிப்பாளரின் மனக்குமுறலுக்கு ஆளான எம்ஜிஆர்
மண்ணை விட்டு மறைந்தாலும் நம் நெஞ்சை விட்டு நீங்காமல் ஒரு தெய்வமாகவே வாழ்ந்து வருபவர் நடிகர் எம்ஜிஆர். எம்ஜிஆரை பற்றி இன்னமும் நாம் பேசிக் கொண்டிருக்கிறோம் என்றால் அவர் இருக்கும் போது எந்த அளாவுக்கு அவரை கொண்டாடியிருப்பார்கள் என்று யூகிக்க முடிகின்றது. மக்கள் நலனே நம் கடமை என்று இருந்தவர் எம்ஜிஆர். இந்த நிலையில் எம்ஜிஆரால் தனக்கு சில விஷயங்களில் நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது என பிரபல தயாரிப்பாளரான தேவராஜன் குணசேகரன் ஒரு பேட்டியில் கூறினார்.
ஹிந்தியில் சச்சா சூட்டா என்ற படத்தை தமிழில் 50000 ரூபாய்க்கு ரைட்ஸ் வாங்கியிருந்தார் எம்ஜிஆர். அந்தப் படத்தை தமிழில் எடுக்க வேண்டும் என விரும்பி தயாரிப்பாளர் தேவராஜனிடம் கூறியிருக்கிறார். அதற்கு தேவராஜனும் வேறொரு தயாரிப்பாளரை வைத்து பண்ணலாம் என சொல்ல ஆனால் நீங்கள் தான் பண்ண வேண்டும் என எம்ஜிஆர் கூறினாராம். இவரும் சரி என சொல்ல சம்பளமாக எம்ஜிஆர் 7 லட்சம் கொடுங்கள் என கேட்டாராம்.
இதை கேட்டதும் தேவராஜனுக்கு ஒரே அதிர்ச்சியாம். ஏனெனில் அதுவரை மாட்டுக்கார வேலன், தலைவன் போன்ற படங்களுக்கு எல்லாம் 5 லட்சம் தான் கொடுத்தாராம். அப்படி இருக்கும் போது இந்தப் படத்திற்கு மட்டும் ஏன் 7 லட்சம் என தயாரிப்பாளர் கேட்டிருக்கிறார். அதற்கு எம்ஜிஆர் இந்த படத்தை 6 மாதத்தில் முடித்து தருகிறேன், என சொல்லியிருக்கிறார்.
அதற்கு தேவராஜன் சம்மதம் தெரிவித்து வெளியில் வட்டியில் வாங்கி ஒரே தொகையாக 7 லட்சத்தை எம்ஜிஆரின் வீட்டில் போய் கொடுத்தாராம். அதுவரை அந்த ஹிந்தி படத்தின் தமிழ் ரைட்ஸை 50000 ரூபாய்க்கு வாங்கிய எம்ஜிஆர் 60000 ரூபாய்க்கு தேவராஜனுக்கு விற்றிருக்கிறார். அதை வாங்கிக் கொண்டு படத்திற்கான பூஜை 1973 ல் கருணாநிதி தலைமையில் போட்டார்களாம்.
இதையும் படிங்க :கருணாநிதி கதையை காபி அடித்த கண்ணதாசன்… ஆனா கடைசியில் கலைஞரைதான் பாதிச்சது!..
ஆனால் நடந்ததோ 1973 ல் ஆரம்பிக்கப்பட்ட இந்தப் படம் தான் ‘ நினைத்ததை முடிப்பவன்’.ஆனால் படம் முடிந்ததோ 1957 ஆம் ஆண்டில் தானாம். அதுவரை அந்த தயாரிப்பாளருக்கான வட்டி ஏகப்பட்ட அளவில் அதிகமாகிவிட்டதாம். அந்த நேரத்தில் தான் எம்ஜிஆரும் கட்சி ஆரம்பிக்க அதில் பிஸியாக இருந்து விட்டாராம். அதனாலேயே படம் முடிவதில் தாமதம் ஆகிவிட்டதாம். ஆனால் இந்தப் படம் வசூலில் அள்ளினாலும் எனக்கு ஒரு விதத்தில் நஷ்டம் தான் என அந்த தயாரிப்பாளர் தேவராஜன் ஒரு பேட்டியில் கூறினார்.