குடும்பத்துக்கே தெரியாமல் பிரதீப் ரங்கநாதன் செய்த வேலை… இதுல கூட சீக்ரெட்டா!..

Published on: May 30, 2023
---Advertisement---

முன்பெல்லாம் தமிழ் சினிமாவில் இயக்குனராவது என்பது பெரும் கடினமான விஷயமாக இருந்தது. ஆனால் தற்சமயம் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் காரணமாக இயக்குனராவதும், நடிகராவதும் சினிமாவில் வாய்ப்புகளை பெறுவதும் எளிமையான ஒரு விஷயமாக ஆகிவிட்டது.

முன்பெல்லாம் பத்து படங்களுக்கு மேல் உதவிய இயக்குனராக பணிபுரிந்த பிறகுதான் அடுத்து ஒரு படத்தை இயக்க முடியும் என்கிற நிலை இருந்தது. இதில் பாரதிராஜா, பாலு மகேந்திரா போன்ற ஒரு சில இயக்குனர்கள் விதிவிலக்கு. ஆனால் இப்போதைய காலகட்டத்தில் பல இயக்குனர்கள் உதவி இயக்குனர்களாக இல்லாமல் நேரடியாக சினிமாவில் வாய்ப்பை பெற முடிகிறது.

Pradeep Ranganathan
Pradeep Ranganathan

அதேபோல ஓரிரு படங்கள் இயக்கிய பிறகு அவர்களுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கிறது. அப்படி தமிழ் சினிமாவில் குறைந்த காலத்திலேயே பெரும் வரவேற்பை பெற்றவர் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன். முதன்முதலாக 2019 ஆம் ஆண்டு ஜெயம் ரவியை வைத்து கோமாளி என்கிற திரைப்படத்தை இவர் இயக்கினார்.திரைப்படம் நல்ல வெற்றியை கொடுத்தது. அதன்பிறகு இவரே நடித்து இயக்கிய லவ் டுடே திரைப்படம். எதிர்பார்த்ததை விட அதிக வசூல் சாதனை படைத்து பெரும் வெற்றியை கொடுத்தது.

அதனையடுத்து மீண்டும் கதாநாயகனாக நடித்து வருகிறார் பிரதீப் ரங்கநாதன் அவர் ஒரு பேட்டியில் கூறும்பொழுது தனது முதல் பட அனுபவம் குறித்த சுவாரஸ்யமான விஷயம் ஒன்றை பகிர்ந்திருந்தார். அதாவது முதல் படத்தின் வாய்ப்புகளுக்காக பிரதீப் ரங்கநாதன் அலைந்து கொண்டிருந்த சமயத்தில் அந்த விஷயம் தனது வீட்டிற்கு தெரியாமல் பார்த்துக் கொண்டார்.

Pradeep Ranganathan
Pradeep Ranganathan

இதற்காக ஏற்கனவே வேலை பார்த்த பொழுது வீட்டிற்கு தெரியாமல் காசு சேர்த்து வைத்துள்ளார். ஆறு மாதம் முன்பு வேலையை விட்டு நின்று விட்டு இந்த ஆறு மாதத்திற்கும் சம்பளத்திற்காக, சேர்த்து வைத்திருந்த பணத்தை கொடுத்து சமாளித்துள்ளார்.வீட்டிலும் அவர் வேலைக்கு செல்கிறார் என்று நினைத்து இருந்திருக்கின்றனர். ஆனால் அந்த ஆறு மாத காலம் அவர் சினிமாவில் வாய்ப்புகளை தேடி அலைந்திருக்கிறார். பிறகு வாய்ப்புகளை பெற்று படத்தில் கமிட்டான பிறகுதான் அவர் வீட்டில் இந்த விஷயத்தை தெரிவித்துள்ளார்.

அவரது வீட்டில் சினிமாவில் இயக்குனராக அனுமதிக்க மாட்டார்கள் என்பதால் இந்த விஷயத்தை செய்துள்ளார் இதை அவர் ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.

இதையும் படிங்க: “அந்த டைட்டில் வேணும்”.. இயக்குனர் ஹரிக்கு போன் செய்த வெற்றிமாறன்! ஆனால்

Rajkumar

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.