Cinema News
விஜய்க்கு வில்லனா நடிக்கனுமா! சத்தியமா முடியாது- யோசிக்காமல் ரிஜக்ட் செய்த 80களின் கனவு கண்ணன்… ஏன் தெரியுமா?
சமீப காலமாக கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின் ஆகிய முன்னணி இயக்குனர்களும் விஜய் சேதுபதி, அர்ஜூன் ஆகிய முன்னணி நடிகர்களும் வில்லனாக நடித்து வருகின்றனர். கௌதம் வாசுதேவ் மேனன், “பகாசூரன்” திரைப்படத்தில் வில்லனாக நடித்திருந்தார். தற்போது “லியோ” திரைப்படத்தில் கேங்கஸ்டராக நடித்து வருகிறார்.
அதே போல் மிஷ்கின் “சவரக்கத்தி” திரைப்படத்தில் வில்லனாக நடித்திருந்தார். அதன் பின் தற்போது “லியோ” திரைப்படத்தில் கேங்கஸ்டராகவும் “மாவிரன்” திரைப்படத்தில் வில்லனாகவும் நடித்து வருகிறார். மேலும் முன்னணி நடிகரான விஜய் சேதுபதி, “பேட்ட’, “மாஸ்டர்’, “விக்ரம்” ஆகிய திரைப்படங்களில் வில்லனாக நடித்துள்ளார்.
இவ்வாறு பல முன்னணி நடிகர்களும் இயக்குனர்களும் வில்லன்களாக நடித்து வரும் நிலையில், 80களை சேர்ந்த ஒரு முன்னணி கதாநாயகர் விஜய்க்கு வில்லனாக நடிப்பதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். அவர் யார்? ஏன் விஜய்க்கு வில்லனாக நடிக்க மறுத்தார்? என்பது குறித்து இப்போது பார்க்கலாம்.
கடந்த 2016 ஆம் ஆண்டு விஜய், சமந்தா, எமி ஜாக்சன், நைநிகா, மொட்டை ராஜேந்திரன் ஆகியோரின் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் “தெறி”. இத்திரைப்படம் மாபெறும் வெற்றிபெற்ற திரைப்படமாக அமைந்தது. இத்திரைப்படத்தில் இயக்குனர் மகேந்திரன் வில்லனாக நடித்திருந்தார்.
முதலில் இத்திரைப்படத்தில் வில்லனாக நடிக்க நடிகர் மைக் மோகனைத்தான் படக்குழுவினர் அணுகினார்களாம். ஆனால் மோகன், “நான் நடித்தால் ஹீரோவாகத்தான் நடிப்பேன்” என கூறியிருக்கிறார். அதன் பிறகுதான் இயக்குனர் மகேந்திரன் வில்லனாக நடித்திருக்கிறார்.
80களில் டாப் நடிகராகவும் அன்றைய இளம் பெண்களின் கனவு கண்ணனாகவும் திகழ்ந்த மைக் மோகன் ஒரு கட்டத்தில் மார்க்கெட்டை இழந்தார். அதன் பின் சினிமாவில் பல காலமாக தென்படாமல் இருந்த மோகன், தற்போது “ஹரா” என்ற திரைப்படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார்.
இதையும் படிங்க: மொத்த படத்தையும் மூணு தடவை டப்பிங் பண்ணுனேன்!.. – சூது கவ்வும் நடிகரை படுத்தி எடுத்த மணிகண்டன்…