நானும் சிலுக்கும் ஒன்னா இருக்கும் போது பாத்துட்டாங்க! – நீண்ட நாள் ரகசியத்தை பகிர்ந்த பிரபலம்

Published on: June 2, 2023
silk
---Advertisement---

தமிழ் சினிமாவில் 80களில் தன்னுடைய காந்த கண்ணால் அனைவரையும் தன் வசம் ஈர்த்தவர் நடிகை சில்க் ஸ்மிதா. திறமைசாலியான நடிகை மற்றும் அனைவரிடமும் குழந்தைத்தனமாக பழகக்கூடிய நடிகையும் கூட. இன்று அவர் நம்மிடம் இல்லாவிட்டாலும் அவரைப் பற்றிய சில நினைவுகள் அவ்வப்போது பல பிரபலங்கள் அளிக்கும் பேட்டிகளின் மூலம் தெரிந்து வருகிறோம்.

silk1
silk1

அவருடைய தற்கொலை இன்றும் ஒரு புரியாத புதிராகவே இருந்து வருகின்றன. சில்க் ஸ்மிதாவுடன் நெருக்கமாக இருந்த பிரபலங்களுக்கு கூட அவரின் மரணம் புதிராகவே உள்ளது. அந்த அளவுக்கு அவர் தற்கொலை செய்வதற்கான காரணம் என்ன என்று இன்றுவரை அவர்கள் அதை நினைத்து புலம்பிக் கொண்டு தான் வருகின்றனர்.

ஆனால் சில பேர் சில்க் ஸ்மிதா யாரையோ திருமணம் செய்ய போவதாகவும் இந்த விஷயத்தை சொல்லி மறுநாளே அவரின் தற்கொலை செய்தி வந்தது எனவும் கூறினர். இந்த நிலையில் சில்க் ஸ்மிதா உடன் தன்னுடைய நெருக்கம் பற்றி முதன்முதலாக பிரபல ஒளிப்பதிவாளரான வேலு பிரபாகரன் ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.

silk2
silk2

வேலு பிரபாகரன் நாளைய மனிதன் என்ற படத்தில் மூலம் முதன்முதலாக இயக்குனராக அறிமுகமானார். அதுமட்டுமில்லாமல் பிக் பாக்கெட், அதிசய மனிதன், உருவம், புதிய ஆட்சி, அசுரன் ,ராஜாளி போன்ற பல படங்களுக்கு ஒளிப்பதிவாளராகவும் இருந்திருக்கிறார். அவர் ஒரு பேட்டியில் கூறும்போது “தான் ஒரு மலையாள நடிகையுடன் தொடர்பில் இருந்ததாகவும் ஆனால் அவர் அடிப்படையில் ஒரு விபச்சாரம் செய்தவராகவும் அவருக்கு ஏற்கனவே லண்டனில் ஒருவருடன் பழக்கம் இருந்ததாகவும் அதனாலயே அவரிடம் இருந்து விலகி வந்ததாகவும்” கூறினார்.

அவரைத் தொடர்ந்து ஒரு சில நடிகைகளுடனும் தொடர்பில் இருந்திருக்கிறேன் என்று மிக வெளிப்படையாக வேலு பிரபாகரன் கூறினார் .அதன் பிறகு மற்றவை நேரில் என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த ஜெயதேவி என்பவர் உடன் வேலு பிரபாகரனுக்கு பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. ஜெயதேவியும் இவரை காதலித்து வந்ததாக ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.

silk3
silk3

அந்த நேரத்தில்தான் சில்க் ஸ்மிதாவும் வேலு பிரபாகரனிடம் அவரை காதலிப்பதாக ப்ரொபோஸ் செய்தாராம். வேலு பிரபாகரனுக்கும் சில்க்கை மிகவும் பிடித்த போக இருவரும் பழகி வந்திருக்கிறார்கள் .ஆனால் அதற்கு முன் ஜெயதேவியிடம் கண்டிப்பாக உன்னை நான் திருமணம் செய்கிறேன் என்று வாக்கும் கொடுத்திருக்கிறார் வேலு பிரபாகரன். ஒரு சமயம் வேலு பிரபாகரன் சில்க் ஸ்மிதாவின் வீட்டில் அவருடன் மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டு இருந்தாராம்.

இதையும் படிங்க :ஆயிரத்தில் ஒருவன் 2 சோலி முடிஞ்சிடுச்சு- ஷாக் கொடுத்த மூத்த பத்திரிக்கையாளர்… அடக்கொடுமையே!

இதை தெரிந்து கொண்ட ஜெயதேவி நேராக சில்க் ஸ்மிதாவின் வீட்டிற்கு சென்று அவர்கள் இருவரும் இருப்பதை நேரில் பார்த்திருக்கிறார். நேராக வேலு பிரபாகரனிடம் ஜெயதேவி “உனக்கு நான் வேண்டுமா இல்லை அவள் வேண்டுமா” என கேட்டிருக்கிறார். சில்க்கும் வேலு பிரபாகரனிடம் “நீங்கள் என்ன சொன்னாலும் அதை நான் ஏற்றுக்கொள்கிறேன். இப்பொழுதே சொல்லி விடுங்கள்” என்று கூறியிருக்கிறார். வேலு பிரபாகரனுக்கு அவர் கொடுத்த வாக்கு நினைவில் வந்திருக்கிறது .உடனே “நான் இவளுடனே வாழ்கிறேன்” என ஜெயதேவியுடன் வந்து விட்டாராம். ஆனால் கடைசி வரைக்கும் ஜெயதேவியும் வேலு பிரபாகரனும் திருமணம் செய்யாமலேயே வாழ்க்கையை நடத்தி இருக்கிறார்கள். இதை அந்த பேட்டியில் வேலு பிரபாகரன் கூறினார்.

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.