Cinema History
12பி பஸ்க்கு பின்னாடி இப்படி ஒரு கதையா?.. எல்லாத்துக்கும் எம்.ஜி.ஆர்தான் காரணம்…
தமிழ் திரையுலக நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் எம்.ஜி.ஆர். தமிழ் சினிமா துறையில் தொடர்ந்து பல ஹிட் கொடுத்த பெரும் நடிகராக எம்.ஜி.ஆர் இருந்துள்ளார். தொடர்ந்து தமிழில் கமர்ஷியல் படங்களாக கொடுத்து வந்ததால் எம்.ஜி.ஆருக்கு மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருந்தது.
அதே போல அவரது திரைப்படங்கள் அனைத்திலுமே சமூகத்திற்கு நன்மை செய்யும் கதாநாயகனாகவே நடித்திருந்தார் எம்.ஜி.ஆர். நிஜ வாழ்க்கையிலும் மக்கள் பலருக்கும் எம்.ஜி.ஆர் நன்மைகள் செய்துள்ளார். சினிமாவில் உள்ள பலரும் அதை தங்கள் பேட்டிகளில் நினைவுகூர்வதுண்டு.
சினிமா வளர்ந்து வந்த காலத்தில் கோடம்பாக்கம் மிக முக்கியமான இடமாக மாறியது. சினிமா தொடர்பான அனைத்து அலுவலகங்கள், ஸ்டூடியோக்களும் அப்போது கோடம்பாக்கத்தில்தான் இருந்து வந்தன. ஆனால் சினிமாவில் வேலை பார்க்கும் ஊழியர்கள் ஆழ்வார்பேட்டை, டி நகர், வட பழனி போன்ற இடங்களில் குடியிருந்தனர்.
எம்.ஜி.ஆர் எடுத்த நடவடிக்கை:
அப்போது அந்த ஏரியாக்களில் இருந்து கோடம்பாக்கத்திற்கு பேருந்துகளே இல்லாத காரணத்தால் ஊழியர்கள் அனைவரும் கோடம்பாக்கம் சென்று வருவதற்கு மிகவும் கஷ்டபட்டனர். இந்த நிலையில் இதுக்குறித்து எம்.ஜி.ஆரிடம் கூறலாம் என நினைத்த ஊழியர்கள் நேரடியாக சென்று எம்.ஜி.ஆரை சந்தித்துள்ளனர்.
இதை அறிந்த எம்.ஜி.ஆர் உடனே சென்னை மாநகர போக்குவரத்து துறையிடம் பேசி அந்த ஏரியாக்களை கவர் செய்யும் வகையில் 12பி என்னும் பஸ்ஸை விட்டுள்ளார். தமிழகத்திலேயே திரைத்துறை ஊழியர்களுக்காக ஒரு ரூட்டில் பஸ் விட்டவர் எம்.ஜி.ஆர்தான் என இதுக்குறித்து திரைத்துறையினர் கூறுகின்றனர்.
இதையும் படிங்க:இப்படியெல்லாமா பண்ணுவீங்க? ஹாஸ்டலில் பாய் ஃபிரண்டோடு மாட்டிக் கொண்ட பிரியா பவானி