Connect with us

Cinema History

குரலால் வளர்ந்து குரலாலேயே வீழ்ந்த மைக் மோகன்!. என்ன நடந்துச்சு தெரியுமா?

சினிமாவில் வரிசையாக ஹிட் படங்கள் நடித்து உச்சக்கட்ட நடிகராக இருந்தவர் நடிகர் மைக் மோகன். தமிழில் இவர் நடித்த திரைப்படங்கள் யாவும் பெரும் ஹிட் கொடுத்தன. முக்கியமாக மோகன் கதாநாயகனாக நடிக்கும் பல திரைப்படங்களில் அவர் பாடகராக நடித்துள்ளார்.

இதனால் அவரை மைக் மோகன் என்றுதான் பெரும்பாலும் திரைத்துறையில் அழைத்து வந்தனர். இதற்கு பயணங்கள் முடிவதில்லை திரைப்படமும் முக்கிய காரணமாக இருந்தது. அந்த படத்திற்கு பிறகுதான் மோகன் அதிகமாக அவரது படங்களில் பாடகராக நடிக்க துவங்கினார்.

Mohan

Mohan

பாடகர் எஸ்.என் சுரேந்திர்தான் மோகனின் படங்களில் அவருக்கு டப்பிங் பேசி வந்தார். இதனால் மைக் மோகனின் குரல்வளம் நன்றாக இருக்கிறது என பலரும் அவரது குரலை விரும்பினார். இந்த நிலையில் சில காலங்களுக்கு பிறகு மைக் மோகனுக்கும், எஸ்.என் சுரேந்திருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது.

குரலால் வாய்ப்பை இழந்த மோகன்:

இந்த நிலையில் இனி மோகனுக்கு நான் டப்பிங் பேச மாட்டேன் என கூறிவிட்டார் சுரேந்தர். இதனால் கோபமான மோகன் “மக்கள் என் நடிப்பைதான் பார்க்கிறார்கள், அவரது குரலை அல்ல என கூறி” மோகன் தனது படங்களில் அவரே டப்பிங் செய்ய துவங்கினார்.

Mike Mohan

Mike Mohan

ஆனால் மோகனின் நிஜ குரலை மக்கள் ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை. அவர்கள் அந்த குரல் நன்றாக இல்லை. இதுவா மோகனின் குரல் என கூற துவங்கினர். இதனால் அவரது படங்களுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு குறைய துவங்கின. இதுவே மோகன் பிறகு திரைத்துறையில் வாய்ப்பை இழப்பதற்கு காரணமாக அமைந்தன.

பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு ஒரு பேட்டியில் இந்த விஷயத்தை பகிர்ந்திருந்தார்.

இதையும் படிங்க:எம்ஜிஆரை பற்றிய ஒரு ரகசியம்! படப்பிடிப்பில் வெண்ணிறாடை நிர்மலாவிடம் என்ன கேட்டார் தெரியுமா?

 

google news
Continue Reading

More in Cinema History

To Top