ஆமா அப்படித்தான்!. என் பெட்ரூம ஏன் எட்டி பாக்குறீங்க!.. கிசுகிசுவுக்கு கடுப்பான கமல்…

Published on: June 3, 2023
simran1
---Advertisement---

தமிழ் சினிமாவில் நடிப்பிற்கே உதாரணமாக வாழ்ந்து வருபவர் நடிகர் கமல்ஹாசன். சிவாஜிக்கு அடுத்தபடியாக நடிப்பில் கமலைத்தான அனைவரும் போற்றி வருகின்றனர். ஒரு நடிகன் எப்படி இருக்க வேண்டும், என்ன மாதிரியான உழைப்பை கொடுக்க வேண்டும் என்பதற்கு அடையாளமாக இருந்து வருகிறார் கமல்.

கிட்டத்தட்ட 60 வருடங்களுக்கும் மேலாக நடித்து வரும் கமல் சினிமாவை மட்டுமே நம்பி வாழ்ந்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் அரசியலிலும் அவ்வப்போது தலை காட்டி வருகிறார். 80களின் துவக்கத்தில் ஒரு காதல் மன்னனாக வாழ்ந்து வந்தார். அந்த அளவுக்கு உடன் நடிக்கும் நடிகைகளிடம் மிகவும் நெருக்கமான காட்சிகளில் நடித்து வந்தார்.

sim1
sim1

கமல் படம் என்றாலே கண்டிப்பாக ஒரு கிஸ் சீன் இருக்கும் என சில நடிகைகள் பயந்து கொண்டே வாய்ப்பை தட்டிக் கழித்திருக்கின்றனர். அந்த அளவுக்கு காதல் இளவரசனாக இருந்து வந்தார். அந்த நிலைமை கிட்டத்தட்ட விக்ரம் 2 படத்திற்கு பிறகு தான் மாறியிருக்கிறது. விக்ரம் படம் கமலுக்கு முழு ஆக்‌ஷன் படமாக அமைந்தது. ரசிகர்களும் அதை நன்றாகவே ரசிக்க தொடங்கினர்.

இந்த நிலையில் நடிகை சிம்ரன் எந்த கிசுகிசுவிலும் சிக்காதவராக இருந்தார். ஆனால் தொடர்ந்து கமலுடன் பம்மல் கே சம்பந்தம், பஞ்ச தந்திரம் போன்ற படங்களில் கமலுக்கு ஜோடியானார். அதிலிருந்தே இருவரும் ஒன்றாக தங்கியிருக்கின்றனர் என்று அப்போ உள்ள செய்திகளில் கிசுகிசுக்கப்பட்டது.

sim2
sim2

ஆனால் இதை பற்றி கமல் பதிலுக்கு என் வீட்டு ஜன்னலை ஏண்டா எட்டிப்பார்க்கிறீர்கள்? நான் என்ன வேண்டுமென்றாலும் செய்வேன் என அந்த கிசுகிசுவை நியாயபடுத்தும்  அளவிற்கு பேசினாராம். அதுமட்டுமில்லாமல் சிம்ரன் தான் நடிக்கும் படத்திற்கான சம்பளத்தை கூட அப்படியே கமலிடம் தான் கொடுப்பாராம். ஒரு கணவன் மனைவி போலவே வாழ்ந்தார்களாம். ஆனால் கொஞ்ச நாள் கழித்து அந்த உறவும் பிச்சுகிச்சு என செய்யாறு பாலு கூறினார்.

இதையும் படிங்க : எம்.ஆர்.ராதா தன்னை தானே சுட்டுக்கொண்டாரா?- முக்கியமான கேள்வியை எழுப்பிய திரைப்பட டைட்டில்….

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.