தினமும் நான் சந்திக்கிற பிரச்சினை! ஐஸ்வர்யா லட்சுமி வாழ்க்கையில் இப்படி ஒரு சோகமா?

Published on: June 5, 2023
aish
---Advertisement---

தமிழ் சினிமாவில் ஒரு தவிர்க்க முடியாத நடிகையாக வலம் வருகிறார் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி. தமிழ் மட்டுமல்லாமல் மலையாள படங்களிலும் நடித்திருக்கிறார். ஃபிலிம் ஃபேர் விருது மற்றும் சைமா விருது உட்பட பல விருதுகளை வென்றவர் ஐஸ்வர்யா லட்சுமி. பொன்னியின் செல்வன் படத்தில் பூங்குழலியாக வந்து அனைவரையும் வெகுவாக கவர்ந்தவர்.

இதற்கு முன் ஒரு சில படங்களில் நடித்தாலும் பூங்குழலி கதாபாத்திரம் அவரை இந்திய அளவில் பேச வைத்தது. கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட ஐஸ்வர்யா லட்சுமி மாடலிங்கிலும் ஆர்வம் கொண்டவர். அவர் முதன் முதலில் விஷாலுக்கு ஜோடியாக ஆக்சன் படத்தில் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

aish1
aish1

அதன்பின் ஓடிடியில் தமிழ் கேங்ஸ்டர் திரைப்படமான ஜகமே தந்திரம் என்ற படத்தில் தனுஷ் உடன் இணைந்து நடித்தார். இப்படி தமிழ் மலையாளம் போன்ற மொழிகளில் பல படங்களில் நடித்த ஐஸ்வர்யா லட்சுமி கார்கி என்ற திரைப்படத்தின் மூலம் முதன்முதலாக தயாரிப்பாளராக அறிமுகமானார்.

ஒரு நல்ல நடிகை என்ற அந்தஸ்தை விஷ்ணு விஷாலுடன் சேர்ந்து நடித்த கட்டாக்குஸ்தி திரைப்படம் வெளிப்படுத்தியது. அந்தப் படத்தில் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார் ஐஸ்வர்யா லட்சுமி. இப்போது சினிமா உலகில் ஒரு நல்ல நடிகை என்ற பெயரை பெற்று இருக்கிறார். ஆனால் நடிகையாக ஒவ்வொரு நாளும் கடந்து போவதை ஒரு போராட்டமாகவே அனுபவித்துக் கொண்டிருக்கிறாராம் ஐஸ்வர்யா லட்சுமி.

aish2
aish2

ஏனெனில் எம்பிபிஎஸ் பட்டப்படிப்பை முடித்துவிட்டு மருத்துவர் பயிற்சிக்கு தயாரான போது தான் அவர் நடிகையாக மாறினார். ஆனால் அவர் சினிமாவில் வருவதை அவரது பெற்றோர்கள் விரும்பவே இல்லையாம். கடுமையாக எதிர்த்து இருக்கின்றனர். சினிமா என்பது ஒரு மரியாதைக்குரிய இடம் என்பதை அவர்கள் இன்றளவும் கருதவில்லை. அதனால் சினிமாவில் தொடர்வது என்பது நாளுக்கு நாள் தன்னுடைய போராட்டமாகவே இருந்து வருகின்றது என்று கூறுகின்றார்.

இதையும் படிங்க :கரடி வேல பார்த்த லாரன்ஸ்! அனி-லோகேஷ் நடிக்கும் படத்திற்கு வந்த ஆப்பு

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.