Cinema History
அந்த சீன் வச்சா எம்.ஜி.ஆர் கோபப்படுவார்… ஆனாலும் தைரியமாக பாக்கியராஜ் வைத்த காட்சி!..
சினிமா திரையுலகில் ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையும் கைக்குள் வைத்திருந்த பெரும் நடிகராக இருந்தவர் எம்ஜிஆர். ஒரு இயக்குனராக தயாரிப்பாளராக நடிகராக என எந்த துறையிலும் வெற்றியை மட்டுமே கொடுத்து வந்தவர் எம்.ஜி.ஆர்.
தமிழ் சினிமாவில் பல வெற்றிகளை கொடுத்த பிறகு எம்.ஜி.ஆர் அரசியலில் ஆர்வம் காட்டத் தொடங்கினார். முதலமைச்சரான பிறகு சுத்தமாக நடிப்பதை விட்டு விட்டார். அரசியலில் அவருக்கு இருந்த வேலைப்பளு காரணமாக தொடர்ந்து அவரால் சினிமாவில் நடிக்க முடியவில்லை. ஆனாலும் சினிமாவிற்கு தொடர்ந்து ஆதரவளித்து வந்தார் எம்.ஜி.ஆர் அதேபோல தொடர்ந்து சினிமாவில் நடக்கும் விஷயங்களையும் கண்காணித்துக் கொண்டே வந்து கொண்டிருந்தார்.
அப்பொழுதுதான் சினிமா அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து கொண்டிருந்தது தொழில்நுட்ப ரீதியாகவும், கதை ரீதியாகவும் தமிழ் சினிமாவில் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருந்தன.
பாக்கியராஜ் வைத்த காட்சி:
பாரதிராஜாவின் உதவியாளரான பாக்கியராஜ் தனியாக அப்பொழுதுதான் படங்கள் இயக்கத் தொடங்கினார். பாக்கியராஜ் எம்.ஜி.ஆரின் மிகப் பெரும் ரசிகர் ஆவார். அவர் தூறல் நின்னு போச்சு என்கிற ஒரு திரைப்படத்தை இயக்கினார். அந்த படத்தில் நம்பியாருக்கு ஒரு முக்கிய கதாபாத்திரம் கொடுத்திருந்தார்.
எம்.ஜி.ஆர் திரைப்படங்களில் பெரும் வில்லனாக இருந்த நம்பியாரை இந்த படத்தில் நகைச்சுவை கதாபாத்திரமாக அறிமுகப்படுத்தினார். பாக்கியராஜ் அந்த படத்தில் நம்பியாருக்கு ஒரு பாடல் ஒன்றை வைத்திருந்தார். அதில் எம்.ஜி.ஆரை குறிப்பிடுவது போன்ற வசனங்கள் வரும்.
இதை கேட்ட திரைத்துறையினர் இந்த பாடலை நீக்கி விடுங்கள் இது எம்.ஜி.ஆருக்கு கோபத்தை ஏற்படுத்தலாம் என கூறியுள்ளனர். இல்லை இந்த காட்சி இருந்தால்தான் நம்பியாருக்கு அது சரியாக இருக்கும் எனக் கூறிய பாக்கியராஜ் அந்த காட்சியை நீக்கவில்லை. பிறகு திரையில் அந்த பாடல் வரும் பொழுது அதை பார்த்த எம்.ஜி.ஆர் விழுந்து விழுந்து சிரித்துள்ளார் அதை பாக்கியராஜ் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: ஜெயலலிதாவை நம்பியார் எப்படி அழைப்பார் தெரியுமா? ஏன் இவ்வளவு ஸ்பெஷல்…